யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டவர் வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியின் மலசல கூடத்தை பயன்படுத்தியமை மற்றும் விடுதியின் நோயாளர்களின் உணவருந்தும் அறை என்பவற்றை பயன்படுத்தி இருந்த நிலையில். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களை சேர்ந்த சுமார் 70 பேர் அவர்களது வீடுகளில் சுய தனிமை படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பியிருந்த ஒருவர் விடத்தல் பளை தனிமைப்படுத்த நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவர் சுகவீனமுற்று இருந்த காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 07 ஆம் விடுதியில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது கடந்த 25ஆம் திகதி வரை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பின்னர் அவர் விடத்தல்பளை தனிமைப்படுத்த நிலையத்திற்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உள்ள மையானது கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைக் குழு நேற்று கூடியது அதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் விடுதியின் மலசல கூடத்தை பாவித்துள்ளார் மற்றும் நோயாளர்கள் உணவு அருந்தும் அறைக்குள் சென்று இருந்தமையும் என்ன தகவல் அளிக்கப்பட்டதுக்கு அமைய அதனால் ஏற்படும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளையும் சுய தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார குழு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் பணி நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது வடக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை குருநாகல் மாவட்டங்கள் என சுமார் 70 பேர் வரை இவ்வாறு அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மிக விரைவில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.