அரசியலமைப்பின் 33 வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன தலைமையில் நியமித்து இருந்த கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் பௌத்த மகா சங்கங்களை பிரதிநிதிவப்படுத்தி மேலும் 4 பிக்குகளை திரு கோட்டாபய ராஜபக்சே நியமித்து இருக்கிறார்
1. அஸ்கிரியா பீடத்தை சேர்ந்த தர்மகீர்த்தி ஸ்ரீ ராதனபால உபாலி தேரோ,
2. மல்வத்த பீடத்தை சேர்ந்த அம்பன்வாலே ஸ்ரீ சுமங்கல தேரர்
3. மல்வத்த பீடத்தை சேர்ந்த டாக்டர் பஹமுனே சுமங்கல நாயக்க தேரர்,
4. அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த டாக்டர் வெனரபிள் மேதமக தமனா தேரர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்கள் பௌத்த மத பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை என்பதோடு அவை பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடையவை என்பதால், பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டுதலும் ஆதரவும் அனுசரணையும் இந்த செயலணிக்கு தேவை என்பதன் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் . ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் 2000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக இந்த செயலணி அறிவித்து உள்ள சூழலில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன
இவ்வாறு வரலாற்று ரீதியான பேராபத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டு நிற்கும் இந்த சூழலை எதிர்கொள்ளுவதற்க்கான செயலதிட்டத்தை தமிழ் தேசிய கட்சிகள் தாமதிக்காது முன் வைக்க வேண்டும் குறிப்பாக செயல்பாட்டு அரசியல் மூலமாக மட்டுமே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடத்தை சிதைக்கும் வேலைகளை தடுக்க முடியும் என்பதை தமிழ் தேசிய கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.