திருமலையில் தூக்கில் தொங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்

68

திருமலையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

சம்பவம் குறித்து தெரியவருவதாவது -சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில் பணத்தை செலுத்துவதற்கு உறவினர்கள் பணத்தை வழங்கிய நிலையில் அவர் கவலையில் தூக்கில் தொங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாம் பணத்தை சரியாக கையாள வேண்டும்,இல்லையெனில் பணம் நம்மை மோசமாக கையாண்டுவிடும்.தேவையில்லாதவற்றுக்காக நாம் பணத்தை செலவிடும் போது,சீக்கிரமே நமக்கு தேவையானவற்றை பணத்துக்காக இழக்க வேண்டி வரும்.அதில் உயிரும் அடக்கம்..நிலையில்லாத உலகில் எல்லாமே மாறகூடியது..இருக்கும் சந்தர்ப்பங்கள் வளங்களை வைத்து வாழ பழகிகொள்ளுதல்வேண்டும்.அகல கால் வைக்கும் போது அவதானமாக இருப்பதுவே சிறந்தது.தற்கொலை முடிவுகள்,நொடி நேர மனதூண்டல்களை நம்பி இறப்பது முட்டாள்தனம்.

தற்கொலை தடுபிற்கான மனவளதுணை செயற்பாடுகள் செய்வதை விட,மரணம் பற்றி பயத்தை மக்களிடமிருந்து எடுப்பதற்கான ஆழமான விழிப்புணர்வு வேலைகள்தான் அதிகம் பயன்தரும்.யார் செத்தாலும் எது நடந்தாலும் நீ வாழலாம்.எல்லாவற்றுக்கும் அப்பால் உன்னால் எதுவும் எப்போதும் முடியும் என்ற உண்மையை மக்கள் மனது அறியும்,இறிய வைக்கப்படும் போது இந்த வீண் தற்கொலைகள் மற்றும் மன உளைச்சல்களை தடுக்கலாம்.