இரசாயனத் தாக்குதல் இதுவரையில் வெளிப்படையாக நடாத்தப்பட்டது வியட்னாம் போரிலேயேயாகும். ஆனந்தபுரச் சமரில் தமிழர் தரப்பின் தளபதிகள் வீரச்சாவடைந்த பொழுது அவர்கள் உடலில் எரிகாயங்கள் ஏற்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. இந்த எரிகாயங்களை விளைவிக்கும் இரசாயனமானது ஒருவித களி (Gel) போல இருக்கும். இது இலகுவாக உடலோடு ஒட்டிக்கொண்டு எரியும் தன்மை உடையது. நீரூற்றியோ, அல்லது மண்ணில் புரண்டோ இதை அணைக்க இயலாது. வியட்நாம் போரில் குழந்தை ஒன்று நெருப்புப் பற்றிய நிலையில் அணைக்க முடியாமல் ஓடிவரும் காட்சி பின்னாளில் Havard பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டுக் கண்டறியப்பட்டது. இந்த இரசாயனத்தில் 40,000 தொன் வியட்நாமின் மீது வீசப்பட்டது.
அதன்பிறகு வெளித்தெரியாதவாறு வியட்நாமின் காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் தாவரங்கள் மீது தெளிக்கப்பட்ட இரசாயனத்தின் பெயர் ´´ Agent Orange ´´ என்பதாகும். இது நீண்டகால இன அழிப்பு நோக்கில் தெளிக்கப்பட்டது. மில்லியன் கணக்கான கொள்கலன்கள் தெளிக்கப்பட்ட காரணத்தினாலேயே இன்றுவரை வியட்நாமில் பிறக்கும் குழந்தைகளில் பலர்; புற்று, அங்கவீனப் பிறப்பு, உடற்கூற்றுக் குறைபாடுகள் போன்றவற்றால் அவதியுறுகிறார்கள்.
தமிழீழத்தில் இன்று பலருக்கு இனந்தெரியாத நோய்கள் உருவாகக் காரணம் இவ்வாறான இரசாயன மூலங்களில் ஏதாவதொன்று இனஅழிப்பின் போது வன்னி மண்ணில் விசிறப்பட்டிருக்கலாம்.
Vx என்ற திரவ இரசாயனம் பிரித்தானியாவால் கண்டுபிடிக்கப்பட்டு, 1950 இல் மேம்படுத்தப்பட்டதாகும். விசிறப்பட்ட பின்னர் சுவாசிப்பவர்களுக்கு மரணம் அல்லது தோல் எரிவு ஊடான மரணம் நிகழ வாய்ப்புண்டு. இது விசிறப்பட்டால், அதே இடத்தில் காற்றோடு நீண்டநாட்களுக்குக் கலந்திருக்கும் வாய்ப்பைக் கொண்டதாகும். மனித உடலின் நொதியங்களை இலகுவில் செயலிழக்கச் செய்து, கண்ணின் கருவளையம் பாதிப்புக்குளாவதோடு எச்சில் உருவாவதையும் தடுத்து தொண்டை வரட்சியை உண்டுபண்ணும். தாமதமான மரணத்தை உண்டுபண்ணும் இந்த இரசாயனம் சிரியாவில் மறைமுகமாக உபயோகிக்கப்படுகிறது என்று ஊகிக்கிறார்கள்.
Sarine என்ற இரசாயனத்தை சதாம் உசேன் வைத்திருக்கிறார் என்று ஈராக்கை கிண்டியெறிந்த அமெரிக்கப்படைகள் இறுதிவரை அதைக்கண்டறியவில்லை. உண்மையிலேயே அந்த இரசாயனத்தைக் கண்டறிந்து வைத்திருந்தது யேர்மனி என்று சொல்லப்படுகிறது. சதாம் அந்த இரசாயனத்தை வைத்திருக்கிறார் என உறுதிபடத்தெரிவித்த பிதாமகன்களில் பான் கீ மூன் உம் அடக்கம்.
வல்லரசுகளுக்கு ஏற்றவாறு நாடகமாடும் பான்கீமூன் , தமிழின அழிப்பில் விசிறப்பட்ட இரசாயனங்கள் பற்றி வாய்திறந்ததில்லை. உண்மையில் தமிழின அழிப்பில் ஐ.நா விற்கும் நிறையவே பங்குண்டு. ஆனால் நாமோ ஐ.நா முன்றலில் நின்று நீதிகிடைக்குமென எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்….
-தேவன்