விடுதலை புலிகளும் தமிழக திராவிட மாய அரசியலும்

79

ஒரு திமுககாரரின் பதிவை கடந்து வந்தேன். விடுதலை புலிகளுக்கு நினைவுச்சின்னங்கள் இல்லை, அவர்கள் பற்றிய புத்தகங்கள் இல்லை, பிரபகரனுக்கு அடுத்து அங்கு அடுத்த கட்ட தலைவர்கள் இல்லை. எனவே அது ஒரு தோல்வியடைந்த சித்தாந்தம் என எழுதியிருந்தார்.

1) நினைவுச்சின்னங்கள் :
இன்றைக்கு தமிழகத்தின் சாலையில் நடந்து செல்லும் ஒருவரை மறைத்து உன் அடையாளம் என்ன? என கேட்டால் பெரும்பாலானோர் ‘தமிழ்’ என சொல்லுவர். சிலர் சாதியை சொல்லலாம், சிலர் மதத்தை சொல்லலாம். ஆனால் திராவிடர் என சொன்னால் மேலும் கீழும் பார்க்கப்படுவார். இப்படி இல்லாத ஒரு அடையாளத்தை வைத்து வாக்கு அரசியல் செய்ய தான் புதிது புதிதாக நினைவுச்சின்னங்கள் தேவை.

மற்றபடி உணர்வோடு ஒன்றிய சித்தாந்ததிற்கு நினைவுச்சின்னங்கள் தேவையில்லை. தஞ்சை பெரிய கோவில், கீழடி ஆய்வு இப்படி எதையெல்லாம் பார்த்தால், படித்தால் தமிழருக்குள் பெருமிதம் வருகிறதோ அது எல்லாம் புலிகளின் நினைவுச்சின்னங்களே!

2) புத்தகங்கள்:
உங்களின் இல்லாத ஒரு அடையாளத்திற்கு இருப்பது போல சில வரலாறு தேவை. அதிகாரம் இருந்தது, கூலிக்கு எழுத ஆட்கள் இருந்தது. அதன் விளைவாக வந்ததே நீங்கள் சொல்லும் புத்தகங்கள், ஏன் ஆஸ்திரிய ஸ்டாம்ப் கூட இந்த ரகம் தான்.

ஸ்டாம்பின் வரலாறு வெளியே வந்தது போல மக்கள் விழிப்புணர்வு பெறும்போது நீங்கள் சொன்ன புத்தங்களும் கிழிந்து தொங்கும். ஆனால் படிக்கும்போதெல்லாம் வீரம் கொடுக்கும் பண்டைய புறநானூறு ஆகட்டும், இன்றைய பொன்னியின் செல்வன் ஆகட்டும், இவை எல்லாம் பேசுவது தமிழரின் வீரமே. அது எல்லாம் புலிகளின் புத்தகங்களே !

3) அடுத்த கட்ட தலைமை :
திராவிடத்தில் எஞ்சியிருந்த ஒரு நல்ல மனிதர் வைகோ. தலைவரின் மகனை தலைவராக காட்ட வைகோ இமேஜை உடைத்த நீங்களெல்லாம் தலைமையை உருவாக்குவது பற்றி பேசலாமா? வரலாறும் தெரியாத, வாசிக்கவும் தெரியாத ஒருவரை தலைவராக ஏற்கும் குடும்ப கொத்தடிமைகள் நீங்களெல்லாம் தலைமையை உருவாக்குவது பற்றி பேசலாமா?

அண்ணாவிடம் ஆட்டைய போட்ட பல்லாயிரம் கோடி சொத்துள்ள கட்சியை காப்பாற்ற 380 கோடி செலவு செய்து ஒரு பார்ப்பனரை அழைத்து வருவதல்ல தலைமை, ஈழப்படுகொலைக்கு பிறகு எழுத்தாயுதம் ஏந்தி பிரபாகரன் எனும் பெயர் கேட்டாலே உங்களை கதற வைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞனும் புலிகளின் அடுத்த தலைமையே !

இப்படி இல்லாத ஒரு சித்தாந்தம், பொய்யான வரலாற்று புத்தகங்கள், தத்தித்தனமான ஒரு தலைமை கொண்ட நீங்களெல்லாம் சித்தாந்த ரீதியாக எங்களுக்கு எதிரிகளே இல்லை. நீங்கள் துரோகிகள். பிழைப்புவாதிகள். வீழ்த்தப்படுவீர்கள். எஞ்சியிருக்கின்ற கொஞ்ச நாளைக்கு சிங்களர்கள், மலையாளிகள் என சொம்படித்து பிழைத்துக்கொள்ளவும். 200 ரூபாய்க்கு இண்டலெக்ச்சுவல் பேச வேண்டாம். புரிதலுக்கு நன்றி !