நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடராக ஏற்பட்டுள்ள தலைமை மற்றும் தேசியப் பட்டியல் விவகாரத்தினால் தமிழரசுக்கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகவும் அதன் தொடராக மிக முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்க தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களும் செயற்குழுவும் தீர்மானித்திருப்பதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
தேசியப்பட்டியலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிப்பதற்கு தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்ற சூழலில் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கலையரசனை நியமிக்க சுமந்திரன், சிறீதரன் உட்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது உட்பட்ட அண்மைய சம்பவங்களின் அதிருப்தி நிலையின் தொடராக யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…