தூரநோக்கின் முன்னுதாரணம் தலைவர் பிரபாகரன்…

282

தலைவர் பிரபாகரனை சரியாகப் புரிந்து கொண்ட தமிழர்களால் மட்டுமே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியும்!

“பிரபாகரனை ஆதரித்துக் கொண்டு எப்படி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க உங்களால் முடிகிறது?” என சிலர் கேட்கிறார்கள்.

பதில்:

தலைவர் பிரபாகரனை சரியாகப் புரிந்து கொண்ட தமிழர்களால் மட்டுமே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியும்.

தலைவர் பிரபாகரனுக்கு முந்தைய தமிழ் தலைவர்கள் சிங்களத்தோடு சேர்ந்து முஸ்லிம்களை ஒடுக்கினார்கள். அதன் எதிர்வினையையே தலைவர் பிரபாகரன் வாழ்வா சாவா எனும் நிலையில் இருந்த போராட்ட காலத்தில் எதிர் கொண்டார்.

மெல்லவும் விழுங்கவும் முடியாத நிலை.

அத்தகைய இக்கட்டான சூழலிலும் சிங்களத்தோடோ அல்லது இந்தியாவோடோ இணைந்து முஸ்லிம்களின் எதிர்வினையை அவர் கையாள முனையவில்லை. இந்த காலத்தில் இந்திய அமைதிப் படையுடன் நின்ற தமிழ் இயக்கங்களும் சிங்களப்படையோடு நின்ற தமிழ் இயக்கங்களும் கிழக்கில் முஸ்லிம்கள் விடயத்தில் என்ன செய்தனர் என்பதை முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.

உண்மையில் முஸ்லிம்களின் தமிழர் மீதான எதிர்ப்புணர்வை எந்த வன்மும், எந்த குறுக்கு வழிகளும் இன்றி வெளிப்படையாகக் கையாண்ட ஒரே தமிழ் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

தலைவர் பிரபாகரன் இல்லாததன் ஆபத்தை முஸ்லிம்கள் உணரத் தொடங்கும் காலம் இது என்று சொல்வேன்.

அதுமட்டுமல்ல…

முஸ்லிம்கள் தனியொரு தேசிய இனம் என்பதை தனது போராட்ட அனுபவம் ஊடாக முதன் முதலில் உணர்ந்த தமிழ் தலைவரும் அவரே.

அதை முஸ்லிம்களுக்கும் ஆணி அறைந்தாற் போல் உணர்த்தியவரும் அவரே.

இறுதியாக…

தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு போதும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களத்தோடு கைகோர்க்க மாட்டார்கள்!

பொறுமையின் சிகரம் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்❤

கதிா் ஈழம்