இந்திய – சீனா எல்லை முறுகல்களை தொடர்ந்து,டிக்-டாக் உட்பட்ட 59 சீனா செயலிகளை,உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்திய அரசு தடை செய்துள்ளது.வழமையாக பாகிஸ்தானுடன் எல்லை தகராறுகள் வரும் போது பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று கூறி மக்களை ஏமாற்றுவார்கள்.இப்போது 20க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தை எல்லையில் சீனா கொன்ற பிறகு,எதுவும் பதிலுக்கு அங்கே செய்யமுடியாமல்,சீனா செயலிகளை தடை செய்துள்ளது.டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாகவே டிவிட்டரில் இந்திய அரசின் கைகூலிகளால் பரப்பி கொள்ளப்பட்டிருந்தது.இந்நிலையில் மக்களை திசை திருப்பும் நோக்கில் டிக்டாக்கை தடை செய்த மோடியே எங்களின் அடுத்த பிரதமர் என்று இப்போது மீண்டும் கிளப்பிவிடப்பட்டிருக்கின்றது.இறந்த இருபது இந்திய இராணுவதிற்கு பதில் நடவடிக்கையாக செய்ய எதுவும் முடியாமலும்,அதிலும் பல படி மேல் சென்று சீனா இராணுவம் இந்திய எல்லை பகுதிகளுக்குள் வரவில்லை என்றே மோடி அறிவித்தமை குறிப்பிடதக்கது.எனவே இந்திய இராணுவம்தான் சீன பகுதிக்குள் சென்று உயிரிழந்துள்ளது.அதற்கு டிக்டாக் தடையா? அப்படி என்றால் இதற்கு முதலே அவற்றை தடை செய்திருக்கலாமே? இந்திய சீன முறுகல்களின் பின்னால் அமெரிக்கா இந்தியாவிற்கு தட்டி கொடுத்து கொண்டுள்ளது.அதன் திட்டமிடல்களிலேயே இவை நடந்தேறுகின்றன.
இதே வேளை டிக்டாக்கில் முழு பைத்தியமாக சுற்றி திரிந்த மில்லியன் கணக்கான இந்தியர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை,சில தற்கொலைகள் நடக்க வாய்ப்பு உள்ளது.சமூக அங்கிகாரங்களுக்காக ஏங்கி பைத்தியமாக டிக்டாக்கில் வேடிக்கை காட்டி ஊரை சிரிக்க வைத்தவர்கள் இப்போது அழ ஆரம்பித்திருப்பார்கள்.இவர்களில் சில பைத்தியம் முத்தி தற்கொலை செய்து கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.இவ்வளவு நாட்களாக ஊரில் இருந்தவர்களை டிக்டாக்கில் வித்தைகாட்டி பைத்தியம் பிடிக்க வைத்தார்கள்.இன்று டிக்டாக் திடிரென தடைசெய்யப்பட்டதால்,அவர்களின் பைத்தியகாரதனம் அவர்களையே திருப்பி தாக்கிகொள்ளும்.பக்கத்தில் இருப்பவர்களை கடித்து வைத்து கொள்ளகூடும்.கவனம் தேவை
அமெரிக்காவை கண்கானிப்பதாக கூறி டிக்டாக் தடை செய்ய அமெரிக்க அரசு முயற்சிக்கின்றது.இருந்த போதிலும் இதுவரை தடை செய்யவில்லை.இனி இந்தியாவில் டிக்டாக் தடை என்பதை அமெரிக்க ஊடகங்கள் ஊதி பெருப்பித்து அமெரிக்காவில் மக்களின் மனங்களை மாற்ற முயற்சிக்கும்.அது சரிவரும் பட்சத்தில் சீனாவின் டிக்டாக் செயலி தடை உலகில் பல இடங்களில் வர வாய்ப்புள்ளது.