டிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்!

138

உலகின் முதல்தர Appம் அதிக பாவனையாளர்களை கொண்ட சீன நிறுவனமான டிக்டாக்கை,அமெரிக்க பில்லியனரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் வாங்க உள்ளதாக தெரியவருகின்றது.டிக்டாக் உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளதுடன்,அவர்களை அடிமையாக்கி வைத்து பெரும் பணம் சம்பாதித்துகொண்டுள்ளது.கொரானாவை தொடர்ந்துள்ள சீனாவிடனான பனிபோரில்,சீன பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கில் நடாத்தப்படும் மறைமுக போர்களின் அங்கமாக,டிக்டாக்கை தடை செய்யும் முயற்சியை அமெரிக்கா இந்தியாவினூடாக ஆரம்பித்து வைத்து,கோடிக்கணக்கான ரசிகர்களை பிரித்து வெற்றியும் கண்டது.அடுத்து அமெரிக்கா இராணுவத்தில் டிக்டாக் தடையுத்தரவை போட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.

எனவே எதிரியின் பலத்தை அழிப்பதை காட்டிலும் அதை தமக்கு சாதகமாக திருப்புவது நல்லது என கண்டுகொண்ட அமெரிக்க அரசு,தமது செல்லபிள்ளையான பில்கேட்ஸ் மூலமாக அதை பெரும்தொகை பணத்துக்கு வாங்கி,அமெரிக்க உடைமையாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.டிக்டாக் வாங்கும் பேச்சுவார்த்தை ஒரு புறம்,மறுபுறம் அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யவுள்ளதாக மிரட்டி கொண்டே அதை வாங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டுள்ளன்.

பில்கேட்ஸ் டிக்டாக்கை வாங்குமிடத்து,இனி டிக்டாக் அமெரிக்க அடையாளத்துடன் வருவதுடன்,இந்தியாவில் அதற்கு இருக்கும் தடைகளும் எடுக்கப்பட்டு,டிக்டாக் புள்ளிங்க உற்சாகமாக தமது 2.O பாகத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.