சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

1768

நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவை பெற்ற கட்சியான தமிழ் தேசிய முன்னணி ஈழத்தில் பெருவெற்றி,இரு எம்பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இரண்டாம்கட்ட தலைவர்களும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர்.நாம் தமிழருக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.இரண்டுமே இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட கடந்த பத்து வருடத்தினுள் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளாகும்.நிலையான தீர்வை அடிப்படை பிரச்சினைகளை அறிந்து,அதற்குரிய வரைபுகளையும் கொள்கையில் விட்டுகொடுக்கா தன்மையையும் கொண்டு நடாத்தப்படுகின்ற கட்சிகள்.தமிழ் தேசிய முன்னணக்கு இன்று ஈழ அரங்கில் கிடைத்துள்ள பாரிய மக்கள் ஆதரவுக்கும் கட்சி சரியான பாதையில் தொடர்ந்து வழிநடத்தப்படும் இடத்து,மிகப்பெரிய ஒரு இடத்துக்கு உலக தமிழர்களை கொண்டு செல்லுவது திண்ணம்.

10 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது உறுதியான வெற்றியை பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் முன்னணியின் வளர்ச்சி வேகம் இன்னும் பல மடங்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னணியை தாங்கி, தூக்கி நிறுத்தி அந்த வெற்றியில் பங்காளிகளாக இணைந்து கொண்டவர்கள் அனைவருமே அடிப்படையில் இளைஞர்கள்..

“எமது அடுத்த பரம்பரை எங்களை விட வேகமாக போராடும்” என்ற தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் காலமாக இனிவரும் காலங்கள் அமைய இருக்கின்றன.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போய் உள்ள எமது உரிமைப்பிரச்சனைக்கும், உடனடிப்பிரச்சனைக்கும் தீர்வுகளை காண்பதற்கு, எமது இனம் ஈழத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு, தமிழ் தேசியத்தில் உறுதியாக இருக்கின்ற உலக தமிழர்களை ஒன்றிணைத்து, பலப்படுத்தி முன்னேற்ற பாதையில் ஈட்டுசெல்ல வேண்டும்..