
#கூட்டமைப்பின் உருவாக்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் நோக்கம் என்ன.சோலை காட்டு பொம்மைகளாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (பகுதி 2)
#இந்தப் பதிவும் மிகவும் நீண்ட பதிவு. ஆனால் இந்த பதிவுடன் எனது இந்த பதிவை முடித்து விடுகிறேன்.ஆனால் இந்தப் பதிவில் விடுதலைப்புலிகளின் இராணுவ திட்டமிடலை தவிர்த்து பதிவை பதிவு செய்ய விரும்புகிறேன்….
#அதாவது ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்த விடுதலைப்புலிகள் மறுபுறத்தில் யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கான ஒரு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதற்கான கால அவகாசம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்கள் தொடர்ச்சியாக ஆனால் அப்போது இலங்கை அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை…
#விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதியாக ஒரு தீர்மானத்திற்கு வருகிறார் மீண்டும் சண்டையை தொடங்குவதற்கான அனைத்து தயார்படுத்தல்களும் நடைபெறுகின்றன.இங்கே ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன் விடுதலைப் புலிகளின் தலைவர் சமாதானத்தில் எப்பொழுதும் நம்பிக்கை அற்ற ஒரு நிலைமையில்தான் இருந்தார்.காரணம் கடந்த காலங்களில் சமாதான என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொண்டதாக இருக்கலாம்….
#அவரைப் பொருத்தவரை மக்கள் மண் ஆயுத அதிகாரபலம் இது மூன்றும் தான் நமக்கான சுதந்திரம் என்பதை எமது உரிமை என்பதை எம்மை பாதுகாக்கும் கருவி என்பதை அவர் ஆணித்தரமாக நம்பினார்.ஆகவே தமிழர் தாயகப் பகுதிகளை விடுவித்து ஒரு தனி பேரரசை உருவாக்குவது மட்டும் தான் அவருடைய சிந்தனைகள் முதல் தரமாக இருந்தது எப்பொழுதுமே உறுதியாக.நாம் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதத்தை கையில் எடுத்தோம் மக்களை பாதுகாப்பதற்காக எமது இனத்தை பாதுகாப்பதற்காக.அந்த ஆயுதம் கையில் இருக்கும்வரைதான் எமது இனம் பாதுகாக்கப்படும் என்பதை இறுதிவரை உறுதியாக நம்பியவர்….
#ஆனால் இப்பொழுது நிலைமை மாற்றமடைகிறது.ரணில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.சமாதானம் உருவாகிறது இரு தரப்புக்கும் மத்தியில்….
#பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் மத்தியில் ஒரு சோர்வு அல்லது சிறு விரக்தி ஏற்படுகிறது அனைத்து போராளிகள் மத்தியில்.காரணம் ஒரு சண்டையை எதிர்பார்த்து ஒரு நில மீட்புப் போராட்டத்தை எதிர்பார்த்து மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர்களுக்கு. இலங்கை அரசும் யுத்தத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்ற விடயம் தெரிந்ததும் எதிர்பார்ப்புகள் நொருங்கியது போல் மூத்த போராளிகளில் இருந்து அனைவரிடமும் காணக்கூடியதாக இருந்தது…..
#இப்படி நிலைமையில் இருக்கும் பொழுது அன்டன் பாலசிங்கம் அவர்கள் இரணைமடுக் குளத்தில் வந்து இறங்குகிறார் நீரில் மிதக்கும் விமானத்தின் மூலம்.அன்றைய இரவு பொழுது விடுதலைப்புலிகளின் தலைவருடன் சந்திப்பு நடைபெறுகிறது.அப்பொழுது அதிகமான தளபதிகள் வைத்த கோரிக்கை முக்கியமாக அண்டன் பாலசிங்கம் அவர்களிடம் நாம் எதற்காக இந்த சமாதானத்தை தொடரவேண்டும் என்பது சம்பந்தமாக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முக்கியமான போராளிகளுக்கு ஒரு ஒன்றுகூடலை உருவாக்கி அவர்களுக்கு விளக்கமளிக்க கேட்டுக் கொண்டார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவரும் அதை மிகவும் எதிர்பார்த்தார்….
#ஒரு சில தினங்களில் சண்டையை எதிர்பார்த்து அனைத்து பயிற்சி கல்லூரியிலும் பயிற்சியில் இருந்த முக்கியமான போராளிகள் அனைவருக்கும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அண்டன் பாலசிங்கம் அவர்கள் சமாதானத்தை பற்றிய ஒரு தெளிவான உரையை நிகழ்த்தினார்.காரணம் இந்த சமாதானம் ஒரு நீண்ட வருடங்களை பிடிக்கும் என்பதை தலைவரும் அன்டன் பாலசிங்கம் அவர்களும் திடமாக நம்பினார்.காரணம் மூன்றாம் தரப்பு ஒன்றின் அதிகமான உட் பிரவேசம்.ஆகவே போராளிகளின் மனச்சோர்வை நீக்க வேண்டிய பொறுப்பு அப்பொழுது மிக முக்கியமாக இருந்தது…
#அன்று அங்கு உரையாற்றிய பாலசிங்கம் அவர்களின் உரையிலிருந்து ஓரளவு முக்கிய போராளிகள் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார்கள்.
பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டது சமாதானம் தற்காலிகமானது என்பதை அவர்கள் அனைவருக்கும்…
#உண்மையில் இந்த சமாதானத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் எதற்கு பயன்படுத்த விரும்பினார் என்றால் ஆட்பலம் ஆயுதபலம் இது இரண்டையும் அதிகரிப்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது.ஆனால் அவர் எதிர்பார்த்தை விட சமாதானம் அவரை மிக அதிகமாக ஆட்கொண்டு விட்டது காலப்போக்கில் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக.அது சம்பந்தப்பட்ட பதிவையும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் அவர் மரணத்தை எதிர்பார்த்த பொழுது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது இருந்த அவரின் எண்ணத்தையும் பதிவு செய்கிறேன் மேலும் ஒரு பதிவில்.நிச்சயம் அந்த பதிவை பதிவு செய்ய வேண்டும் அதுதான் அவர் உடன் இருந்த வலியுடன் கூடிய இறுதியான எனது சந்திப்பு….
#இப்படி ஒருபுறம் இருக்க சமாதானம் சூடுபிடிக்கிறது.போராளிகள் அரசியல் பணிக்காக ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கும் செல்கிறார்கள் அரசியல் பணி செய்வதற்காக மட்டுமல்ல சில தேவைகளுக்காக.இப்பொழுது ஆட்டம் சூடு பிடிக்கிறது அரசியலில் மட்டுமல்ல விடுதலை புலிகளின் கட்டமைப்பு சார்ந்தது…
#இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் ஆனந்தசங்கரி மற்றும் மாற்றுத் தலைமைகளின் தலைவர்கள் உட்பட அனைவரும் இதை எதிர்பார்க்கவில்லை இந்த சூடு பிடிப்பான அரசியலை.முக்கியமாக சம்பந்தன் அவர்கள் தனது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த சந்திரிகா அவர்களிடம் பிரத்தியோகமாக ஒரு வேண்டுகோளை விடுத்தார்.ஆனால் விடுதலைப்புலிகள் அவருக்கு பஞ்சாமிர்தம் வழங்கினார்கள் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சியை உருவாக்கி…
#இன்னும் பதிவு செய்வதாக இருந்தால் பதிவு நீண்டு செல்லும் ஆகவே குறுகிய இடைவெளியில் முடித்துக் கொள்கிறேன்.
இப்படி போய்க்கொண்டிருந்த நிலைமையில் சர்வதேசதற்காக தமிழர் நலன் சார்ந்து போராடிய அமைப்புகள் மற்றும் அரசியல் சார்ந்த கட்சிகளை ஒன்றுபடுத்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி நிரல் திட்டம் உருவாக்கப்பட்டது.உண்மையில் இப்படியான ஒரு திட்டம் முதலில் விடுதலைப்புலிகளின் தலைவரிடம் இல்லை
சிவராமன் அன்டன் பாலசிங்கம் அவர்களின் சந்திப்பின் பின் இப்படி ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு பிரபாகரன் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது…..
#விடுதலைப்புலிகள் மீது சர்வதேச மட்டத்தில் பூசப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களை அழிப்பதற்காக இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவோம் என்ற சிந்தனை தான் முதலில் வந்து நின்றது விடுதலைப் புலிகளின் தலைவருக்கு…
#அப்பொழுது அன்டன் பாலசிங்கம் தலைவர் அவர்களுக்கு கூறிய விடயத்தை நினைவுபடுத்துகிறேன்.தம்பி இவர்கள் எல்லோரும் சோளக்காட்டு பொம்மைகள் நாம் தலை ஆட்ட வேண்டும் என்றால் ஆட்ட வேண்டும் ஆடக்கூடாது என்றால் ஆடக்கூடாது.அதை நான் முழுமையாக நெறிப்படுத்திக் கொள்கிறேன்.சம்பந்தர் ஆனந்தசங்கரி உட்பட சிலருக்கு நமது மனசு
கஞ்சி குடுக்கணும் என்று சொன்னாலும் பஞ்சாமிர்தம் வழங்க வேண்டிய நிலமை.சமாளித்து கொள்வோம் சிறிது காலம் தானே.இப்படி அதிகமான உரையாடல்கள்….
#டக்ளஸ் தேவானந்தா சித்தார்த்தன் இருவரையும் இணைத்துக் கொள்வதில்லை என்ற தீர்மானத்தில் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது அதிகமாக உரையாடபட்டது.ஆகவே துரோகிகள் புத்திஜீவிகள் சில நடுநிலைவாதிகள் கொண்டு உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.அதன் அத்தனை நிகழ்ச்சி நிழல்களும் விடுதலைப் புலிகளின் கைவசம் தான் அவர்கள் தான் அனைத்து நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கினார்கள்….
#தமது உயிருக்கு பயந்து வாழ்வதற்கான காலத்தை எதிர்பார்த்து கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் தான் அதிகமானவர்கள்.அவர்களை விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக ஒரு சோலை காட்டு பொம்மையாக பயன்படுத்த முற்பட்டார்கள் உட்படுத்தினார்கள்….
#சாதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் அப்பொழுது 50 வருட அனுபவம் சம்பந்தன் அவர்களுக்கு அரசியலில்.அதேபோல் மாவை சேனாதிராஜா இவர்கள் உட்பட யாரையும் சர்வதேச அரசியலில் விடுதலைப் புலிகள் இணைத்துக் கொள்ளவில்லை இவர்களை விட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மட்டும் சர்வதேச அரசியலை கையாண்டார்கள் எதற்காக.இவர்கள் யாரையும் விடுதலைப்புலிகளின் தலைவர் நம்பவில்லை எப்பொழுதுமே….
#ஆனால் இன்றைய நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய அந்த வீடு என்று இவர்கள் கோஷம் போடும்போது அதை நம்பி அடிமையாக இவர்கள் பின் செல்கிறீர்கள்…
#இவர்களை விடுதலைப்புலிகள் நம்பி இருந்தால் அல்லது இவர்கள் விடுதலைப்புலிகளின் நம்பி அல்லது மக்களை நம்பி இருந்தால் நிச்சயம் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்து முள்ளிவாய்க்கால் அவலத்தை ஏதோ ஒரு வழி முறையில் சிறிது கால இடைவெளியை ஏற்படுத்தி இருக்கலாம் இவர்களின் பதவிகளை துறந்து அப்பொழுது இவர்கள் என்ன செய்தார்கள்…
#சம்பந்தன் சேனாதிராஜா உட்பட அனைவருக்கும் தெரியும் விடுதலைப் புலிகள் தங்களை பொம்மைகளாக பயன்படுத்தினார்கள்.இதுதான் சந்தர்ப்பம் அவர்களை பயன்படுத்துவோம் என்று சரியாக பயன்படுத்தினார்கள்.அவர்கள் பயன்படுத்திய பொழுது மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பழி வாங்கிய விடுதலைப்புலிகளை தான் இவர்கள் பழிவாங்க வேண்டும்.ஆனால் இவர்கள் விடுதலைப்புலிகளுடன் சேர்த்து மக்களையும் பழிவாங்கிய மனித மிருகங்கள்….
#ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.தற்காலிகமாக விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமாதானம் முடிந்ததும் கலைந்து போகக்கூடிய ஒரு மண் வீடு இதுதான் விடுதலைப்புலிகளின் தலைவரின் சிந்தனை…
#ஒவ்வொரு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொண்டர்களும் வீடு சம்பந்தமாக கடந்த காலத்தை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவையில் இருக்கிறீர்கள் மிக முக்கியமாக.இத்தனை வரலாறுகளும் தெரியாமல்தான் ஸ்ரீதரன் சுமத்திரன்
சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் சேனாதிராஜா தொடர்கிறது பட்டியல் போலி தேசியம் பேசுபவர்கள்.நிச்சயம் எதிர்வரும் பதிவுகள் ஊடாக அனைவரின் முகங்களும் மக்கள் முன் கொண்டு செல்வேன்…
#முக்கியமாக வீட்டை உருவாக்கினார் விடுதலைப்புலிகளின் தலைவர் ஆம் அவர் மரணத்தை சந்திக்கும் முன் கூட்டமைப்பின் மீது அவர் எண்ணம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன் அப்போது புரிந்துகொள்ளுங்கள் ஒருவேளை அது அவரின் மரண வாக்குமூலமாக கூட ஏற்றுக் கொள்ளலாம்…..
கடந்தகால நினைவுகளுடன்
அரசியல் சாணக்கியன்… Manikam sinnathampi