தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் கூடிய பகிரங்க எச்சரிக்கை…

146
உங்களுக்கு எமது ஆயுதப் போராட்ட வரலாறு அரசியல் போராட்ட வரலாற்றையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.
1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக அன்று தந்தை செல்வா முழங்கிய வார்த்தையை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவு படுத்தி எனது பதிவை தொடர்கிறேன்…
இடிக்கிறாயா இடித்துப் பார் எந்தன் எலும்போடு தசை மோதி தமிழ் என்றே கூறும் இடிக்கிறாயா இடித்துப் பார்… வெடிகுண்டுடன் விளையாடும் பிள்ளை பிறந்துள்ள காலமிது
இடிக்கிறாயா இடித்துப் பார்….
இந்த வசனத்தை தந்தை செல்வா ஆக்ரோஷமாக கூறும் பொழுது எமது தமிழ் இனத்துக்காக ஆயுதமேந்தி போராடுவதற்காக பிள்ளைகள் பிறந்து விட்டார்கள்.உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன் இதன் விளக்கம்…
அகிம்சை ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவு ஆயுதம் ஏந்த வேண்டிய ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலை தமிழ்மக்களுக்கு எதிராக திசை திருப்பியது சிங்களதேசம்…..
அடித்துக் கூறுவேன் உறுதியாகவும் இறுதியாகவும் எமது ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் எமது இனத்தை அகிம்சைப் போராட்டத்தில் தோல்வியிலிருந்து இருந்து எமது மக்களை பாதுகாத்தது சிங்கள தேசத்திடம் இருந்து…
உங்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம் நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.2002 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு விஜயத்தை மேற்கொண்ட நீங்கள் பாலசிங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் போராட்டத்தின் பங்களிப்பை புகழ்ந்து பேசிய ஒருவர் நீங்கள்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியை எதிர்பார்த்து பேசியதாக நான் எண்ணினேன் அன்று.அதுதான் உண்மையும் கூட அதை காலம் உணர்த்திவிட்டது…
அன்று எமது இளைஞர்கள் ஆயுதத்தை கையில் ஏந்த விட்டாள்.காலத்துக்கு காலம் சிங்கள தேசத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையில் அழிக்கப்பட்டு இருப்போம். இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயக பூமியாக இருந்திருக்காது.சிங்கள தேசத்தில் குளிர்சிகரமான மாகாணங்களாக இருந்திருக்கும்.எனது பதிவை நீட்டுச் செல்ல விரும்பவில்லை….
தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.உருவாக்கிய அவர்கள் மீதும் ஆயுத ரீதியாக போராடிய அனைத்து அமைப்புக்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்படவேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையால்.எமது தமிழ் மக்களின் எதிர்கால நலன் சார்ந்து..
வெறுமனே மன்னிப்பு என்ற வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியாது.ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது அதற்கு முந்திய அரசியலைத் தவிர்த்து ஆயுதப்போராட்ட அமைப்புக்களுடன் விடுதலைப்புலிகளுடன் பயணித்த ஒருவர் என்ற ரீதியில்.முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பின்புலத்தில் செயல்பட்ட ஒருவன் நான் என்பது நீங்கள் அறிந்த விடயம்.கூறிக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு என்று எண்ணுகிறேன்….
என்னைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் அற்று மக்களுக்காக அரசியலுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்களின் ஒட்டுமொத்த குரலாக எனது பதிவை பதிவு செய்கிறேன்….
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சுமந்திரன் அவர்கள் நீக்கப்பட விட்டாள். சிங்கள பெரும் தேசத்துக்கு எதிராகப் போராடிய எமது அன்றைய இளைஞர்களை போல்.இன்றைய இளைஞர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போராடுவதற்கு ஒன்று திரட்ட முடியும் இதுதான் இன்றைய அரசியல் நிலவரம்..
அப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டால்

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் அரசியலில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்து அதிகாரங்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.இது தவிர்க்க முடியாத ஒன்று…

எமது இளைய சமுதாயத்தால் சாதிக்க முடியாத விடயங்கள் எதுவும் இல்லை என்பது நிகழ்கால கடந்த கால நிகழ்வுகள் கூறுகிறது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்.

அதை நினைவில் கொண்டு ஒரு காத்திரமான முடிவை மக்கள் மத்தியில் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்…

அன்புடன்
அரசியல் சாணக்கியன்.
(மாணிக்கம் சின்னத்தம்பி)
சமாதான கால அரசியல் தலைமை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்.