
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இன்றைய தமிழ்த்தேசிய அரசியல்
செய்தி: இந்தியப் பேரரசை பயன்படுத்தத் தவறியமைக்கு விக்கினேஸ்வரன் தான் பொறுப்பேற்க வேண்டும் – வன்னி மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம்
பின்னணி: இளைய சகோதரரே நல்ல கேள்வி. இந்தியப் பேரரசை மட்டுமல்ல உலகில் எந்த அரசானாலும் ஈழத்தமிழ் மக்களின் தேவைகளை அவ்வரசுகளிடம் இருந்து பெற்று நிவர்த்தி செய்வது தமிழ் அரசியலாளர்களின் முக்கிய கடமை. அது ஈழமக்களின்; உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆட்சி வடிவமானாலும் சரி அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்கும் உடனடித் தீர்வுகள் ஆனாலும் சரி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை தக்க வைக்கும் உயர்த்தும் அபிவிருத்தியானாலும் சரி வேலை வாய்ப்புக்களை வழங்கும் தொழில்துறைகளாக இருந்தாலும் சரி.
அதற்கான பதிலை நிச்சயம் விக்கினேஸ்வரன் வழங்க வேண்டும் தான். ஆனால் அவர் மட்டுமல்ல வைத்தியர் சத்தியலிங்கம் என்ற இன்றைய வேட்பாளரும் வழங்கவேணடும். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் தொழிற்பட்ட அனைவரும் வழங்கியாக வேண்டும் சகோதரரே! நேற்றுவரை வடமாகாண சபையில் ஒன்றாக இருந்தவர்கள் நீங்கள் இருவரும். ஒரே கட்சியை வேறு சார்ந்தவர்கள். இன்று பிரிந்து ஒருவர் யாழ் தேர்தல் மாவட்டத்திலும் தாங்கள் வன்னி மாவட்டத்திலும் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் உள்ளீர்கள். வாழ்த்துக்கள்..
விடயத்திற்கு வருவோம். வட மாகாணசபை 2013 ஒக்டோபரில் அமைந்து ஒரு வருடத்தின் பின் 2014ஆம் ஆண்டு நவம்பரில் வைத்தியரே தாங்கள் சுகாதார அமைச்சராக முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் டெல்கி சென்றீர்கள் ஞாபகம் இருக்கிறதா? இந்திய அரசை சந்திக்கவல்ல.. மாறாக ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து மதவாத அமைப்பு நடாத்திய சர்வதேச இந்து மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றீர்கள். அதில் விக்கினேஸ்வரன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் விஸ்வ இந்து பரிசத்தின் சர்வதேச கிளைத்தலைவர்கள் மற்றும் தலா லாமாவுடன் இணைந்து விளக்கேற்றி ஆரம்பத்து வைத்தார்.
இருவரும் அங்கு பல விடயங்களை பேசினீர்கள். வடக்கு கிழக்கு நிலவரங்களைப் பற்றியும்; பேசினீர்கள்.. அப்போது 2014 மே மாதம் பதவியேற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான் ஆட்சியில் வேறு டெல்கியில் இருந்தது. வாஜ்பாய் காலத்து பா.ஜ.க அரசு போலல்லாது தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இற்கு ஆட்பட்டது என்பதுவும் தங்களுக்கு நன்கு தெரியும் என்று நம்புகிறேன். அவ்வாறானால் தாங்கள் இருவரும் அதில் முக்கியமானவர்களாக கலந்து கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளில் என்னத்தை வென்றெடுத்தீர்கள்?
இளைய வைத்திய சகோதரரே உங்கள் சார்ந்து உத்தியோக பூர்வ அறிக்கையில் வெளியான விடயத்தை தங்கள் கவனத்திற்கு மீண்டும் ஒருமுறை கொண்டு வருகின்றேன்.
Dr. S Sathiyalingam
Health Minister, Northern Province, Sri Lanka
Dr. S. Sathiyalingam said that the civil war which ravaged Sri Lanka for decades has ended, but Hindus are yet to find an equitable political solution.
He thanked the VHP for lending moral and political support to Sri Lankan Hindus and urging the Sri Lankan Government to address their concerns.
He recounted the role of Arumuka Navalar in Hindu revival in Sri Lanka and South Bharat during the 19th century. Today, Hindus of Sri Lanka face entrenched institutional discrimination.
As per 1998 data, 1479 Hindu temples (over 80%) had suffered severe damage. Many rare Hindu scriptures have also been lost to mob violence. The psycho-social scars of the war are yet to heal – there are 86,000 widows, while many combatants who surrendered in the last stages of the war are still missing.
The Sri Lankan military has seized large tracts of land belonging to Hindus, and the Northern Province still remains heavily militarized. Acts of rape and sexual violence against Hindu women are still endemic as has been highlighted by many global organisations.
இருக்க விக்கினேஸ்வரன் அவர்கள் மதம் குறித்து ஒரு பெரும் உரையை அங்கு ஆற்றியிருந்தாலும் உத்தியோக பூர்வ அறிக்கையில் அவர் குறித்த உள்ள ஒரு விடயத்தைப் பார்ப்போம்.
Unfortunately, upstaged by other conferences was a debate here on Sri Lanka’s Hindus. C.V. Vigneswaran, chief minister of Sri Lanka’s Northern Province, said that the community’s hardships have continued long after the government’s war with the LTTE ended in 2009:
Eighty per cent of Hindu homes in Sri Lanka were damaged since 1998; 95,000 Tamil Hindus lost their lives in the civil war, leaving 48,000 Tamil widows in Sri Lanka; 13,000 men were disabled, and many of those who surrendered are still missing; many young girls were raped when the LTTE was defeated; and 7,000 square km of Tamil lands have been seized by the Sri Lankan army.
Bharat being the motherland of Hindus, Vigneswaran said, must allay the suffering of Hindus in the neighboring countries, especially in Sri Lanka, Pakistan and Bangladesh; furthermore, Hindus worldwide must mobilize resources to address the economic needs of neighboring Hindu communities that are suffering.
இங்கும ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும் ஒரே சபையில் அதுவும் ஒரே கட்சியில் இருந்து சென்ற இருவர் இருவேறாக எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டுள்ளீர்கள். வைத்தியரே தாங்கள் 86000 போர் விதவைகள் என்கிறீர்கள் விக்கினேஸ்வரன் 48000 போர் விதவைகள் என்கிறார். அவ்வாறு தான் அழிக்கப்பட் கோவில்கள் மற்றும் வீடுகள் குறித்த தரவுகளிலும் உள்ள விடயம். இது ஒரு பெரும் சோகவரலாறான தொடர்கதையாக உள்ளது. எண்ணிக்கைள் எழுந்தமானமாக மாறிமாறி எம்மவர்களால் எங்கும் பயன்படுத்தப்படும் நிலைமை. இது எத்தகைய பாரதூரமான பின்விளைவுகளைக் கொண்டது தெரியுமா?
சரி அபிவிருத்தி குறித்து தாங்கள் என்ன பேசினீர்கள்? தமிழ் மக்கள் குறித்த தீர்வில் உங்கள் பாசையில் இந்துக்கள் குறித்த அரசியல் தீர்வில் என்ன உறுதி சொன்னார்கள்? நீங்கள் உங்கள் பதிலைத் தாருங்கள் விகிகினேஸ்வரனிடமும் கேட்கிறோம். இருக்க நீங்கள் குறிப்பிட்ட மோடியின் விஜயம் யாழிற்கு 2015இல் தான் நடந்தது. அப்போது விக்கினேஸ்வரன் எதுவும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தீர்கள். அதே கேள்வியை உங்கள் கட்சியின் பாராளுமன்றத் தலைமை சம்மந்தர் ஜயாவிடமும் பாராளுமன்றக் குழுவிடமும் வேறு கேட்டீர்களா? ஏனென்றால் அவர்களும் சந்தித்தார்கள்.. பேசினார்கள்.. அவ்வாறானால் அவர்கள் பதில் அதற்கு என்ன? பின்னர் மோடி கொழும்பிற்கு பலமுறை விஜயம் செய்தார். உங்கள் தலைமைகளைச் சந்தித்தார். அப்போதும் அபிவிருத்தி பற்றி என்ன பேசினார்கள்? இதுவரை அது குறித்து என்ன நடந்தது?
கேட்பதற்கு நிறைய இருந்தாலும் வைத்திய இளைய சகோதரரே இறுதியாக ஒன்று.. கடந்த ஆண்டு (2019) அமெரிக்காவில் நடந்த வடஅமெரிக்க சங்கங்களின் சம்மேளன நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு யூலையில் கனடாவூடாக தாயகம் திரும்பினீர்கள். ஆனால் பின்னர் ஒரு வாரத்திலேயே சென்னை விரைந்து தமிழக பா.ஜ.க தலைவர்களை சந்தித்தீர்கள். ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். தங்களுடன் கனடாவில் இருந்து திரும்பி தற்போது திருமலை வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் உள்ள குகதாசனும் கனடாவில் இருந்து ஒருவர் (ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவையையே அதில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்) அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் மற்றும் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் என ஜவர் கலந்து கொண்டீர்கள்.
சிங்கப்பூர் வர்த்தகரும் 2014 டெல்லி சர்வதேச இந்து மாநாட்டில் கலந்து கொண்டவர். அங்கு தான் அவர் உங்களுக்கு அறிமுகமானதும் அதன் தொடர்ச்சியாக அவரை வடக்கில் முதலிடுமாறு அழைத்ததும் வவுனியாவில் உருவான பப்பாசிமர வளர்ப்புவரை அது தொடர்ந்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இடமோ பா.ஜ.க விடமோ பேசிய அபிவிருத்தி தான் என்னவானது என்று தெரியவில்லை. இருக்க தமிழிசை தலைமையிலான தமிழக பா.ஜ.க தலைமையுடன் என்ன பேசினீர்கள் என்றோ ஏன் சந்தித்தீர்கள் என்பது குறித்தோ இதுவரை பேசவில்லை. சரி விக்கினேஸ்வரன் பேசவில்லை.. நீங்களாவது அபிவிருத்தி குறித்து அவர்களுடன் பேசினீர்களா? என்ன சொன்னார்கள்? ஏதாவது உறுதி தந்தார்களா?
ஆனால் தமிழிசை ஆளுனர் ஆனதும் கடந்த சனவரியில் தமிழக பா.ஜ.க வானதி கனடா அழைத்து வரப்பட்டார். அதை ராஜதந்திர நகர்வு எனவேறு சொல்லிக் கொண்டார்கள். ஆனால் மூடிய கதவுகளிற்கு பின்னர் அவரால் எவ்வித உறுதி மொழியும் வழங்கப்படவில்லை என்பதைக் கடந்து கையை விரித்துவிட்டுச் சென்றார் என்பதே உண்மை. இருக்க பா.ஜ.க வின் இந்திய தேசிய பொதுச்செயலாளர் ராம் மட்கேவ்வை தெரியுமா? எப்போதாவது சந்தித்திர்களா? தற்போதைய பா.ஜ.க அரசின் வெளிவிவகாரக் கொள்கையை கையாள்பவர் அவரே. அடிக்கடி கொழும்புக்கு விஜயம் செய்கிறார். ராஜபக்ச சகோதரர்களை தனியே சந்திக்கிறார். பேசுகிறார். ஆனால் உங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பதாவது தெரியுமா? ராம் மக்டேவ் 2014 இல் பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் ஆக்கப்படுவதற்கு முன்னர் 11 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்சின் தேசிய ஊடகப் பேச்சாளர் என்பது தங்களுக்கான தரவு.
இளைய சகோதரரே! குற்றம் காணவேண்டும் என்பதற்காக இவை இங்கே பகிரப்படவில்லை. மாறாக மலையாக எம்மினத்தின் சவால்கள் குவிந்து கிடக்க கதிரைக்காக நீங்கள் மோதிக் கொள்வதுவும் மக்களை வெறும் மாக்களாக்கி உங்கள் உங்கள் கதைகளையே வரலாற்றுக் கதைகளாக்க முனைவதுமே பெரும் வலிதருகிறது. எம் மக்களுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்கள் மேலேயிருந்து அனைத்தையும் புலனாய்வு செய்து கொண்டு தானிருக்கிறார்கள். அவர்களின் குரலாக இந்தப்பதிவு இங்கு அமைந்தது. ஏனையவர்களிற்கும் வரும் நாட்களில் புலனாய்வுக் கதைகள் மட்டுமல்ல அறிவியல்க் கதைகளும் உண்டு. நீங்களாவது இனிவரும் நாட்களில் இன சார்ந்த பொறுப்புடன் நடந்து கொள்ளுவிர்கள் என நம்புகிறோம். மேலுமொரு செய்தியும் பின்னணியுடன் நாளை சந்திப்போம்..
கீழே உள்ள படங்கள்: 2014 சர்வதேச இந்து டெல்கி மாநாட்டில் விக்கினேஸ்வரன். 2019 சென்னை பா.ஜ.க தமிழக தலைவர்களுடனான அவசர சந்திப்பில் வைத்தியர் சத்தியலிங்கம்