தேர்தல் முடிய கூட்டமைப்புக்கு திவசம்,எள்ளெண்ணை ஏற்பாடு

288

கூட்டமைப்பில் உச்சகட்டமாக போய்கொண்டுள்ள உள்வீட்டு பிரச்சினைகள் முற்றி பூதாகரமாக வெடித்து வரும் நிலையில்,இம்முறை தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கும் உள்ளேயும் வெளியிலும் பலத்த போட்டி காணப்படுவதால்,தேர்தல் முடிவுகளோடு கட்சி பலவீனப்பட்டு உடைந்து சிதறும் வாய்ப்புகளே எஞ்சி நிற்கின்றது.தேர்தல் அரசியலில் தமிழினம் சந்தித்துள்ள பல்வேறு அணிகளும் பிரிவுகளும் நல்ல எதிர்காலத்தை தமிழருக்கு கொடுக்கபோவதில்லை எனினும்,கெட்டத்திலும் ஒரு நல்லது என்ற கோட்பாடுபடி கூட்டமைப்பு உடைவதற்கான சாத்தியகூறுகளை அதிகப்படுத்தியுள்ளதுடன்,மாற்று அணியினர்,கட்சியினர்கள் கூட தாங்கள் தற்காலிகமாக வெற்றி பெறுவதை காட்டிலும் கூட்டமைப்பை உடைப்பதன் மூலம்,நிரந்தர அரசியல் எதிர்தன்மையை ஒழித்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

கூட்டமைப்பினுள்,சுமந்திரன் அணி,எதிர் மாவை அணி,நடுவில் மதில் மேல் பூனையாக மீதி அணி என்று மூன்று அணிகளாக பிரிப்பட்டுள்ளனர்.இவற்றில் யார் கை ஓங்கும் என்பது,தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளதுடன்,தேர்தல் வெற்றியை வைத்து இவர்கள் முதலில் செய்யபோகும் முதல் வேலை,உட்கட்சி மோதலை தங்களுக்கு சாதகமாக திருப்பி கொள்வதுதான்,வேறெதுவும் இல்லை..இந்தமுறை தேர்தல் பிரதான மூன்று கட்சிகளுக்கும் உதிரி வேட்பாளர்களுக்கும் கடும் சவாலாக இருக்கும் பட்சத்ததில்,ஆசனங்கள் பரவி பல கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.இந்நிலையில் சுமந்திரன் சிறிதரன் அணி,தமது வெற்றியை பலமாக நம்புவதுடன்,எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் வாயில் வருவதை எல்லாம் அடித்து விட்டு வாக்குகள் கேட்டு வருகின்றனர்.ஒரே நாளில் பலகூட்டங்கள் என்று அங்குமிங்குமாக சுத்தி திரிகின்றனர்.

மறுபுறத்தில்,மாவை சரா அணி,மாவை தனது ஊர்,சாதிகளை வைத்தும் தமிழரசு என்ற பெயரை வைத்தும் வெகுநாளாக பிழைப்பு ஓட்டி வருகிறார்.அதையே இந்த முறை தேர்தலிலும் ஓட்ட முனைவதுடன்,தவிர அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் கனவிலும் பலமாக மிதக்கின்றார்.இவரின் வெற்றி சற்று முடிவானதாக இல்லை.அடுத்து சரா தனது ஊடக பலத்தின் மூலம் உண்மையை பொய்யாக்கி,ஈரை பேனாக்கி பெருமாளாக்கும் வல்லமை,தனது வியாபார உக்திகளை வைத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று கணக்கு போட்டு சனசமூக நிலையங்களுக்கு வாரி இறைப்பதுடன்,கணிசமான பெண் வாக்குகள் விழும் என்றும் நினைக்கிறார்,தேர்தலில் எந்த பக்கம் வெற்றி சாய்கின்றது என்றதை பொறுத்து கூட்டமைப்பு பிரியும்,சுமந்திரன் சிறிதரன் அணி வெற்றி பெற்றாலும் தனியாக இயங்க போவதுடன்,வெளியில் வெற்றி பெற்றவர்களையும் ஏற்கனவே நீங்கியவர்களையும் மீண்டும் கூட்டமைப்பு உள்ளே எடுத்து பலப்படுத்தும் நோக்கில் மாவை அணி கணக்கு போட்டு வைத்துள்ளதுடன்,அதன் மூலம் சுமந்திரன் அணியை ஒதுக்கி புறக்கணிக்கலாம் என்பதே மாவை சரா போட்டு வைத்துள்ள ப்ளான்.

இவர்களின் A/C ரூம் கணக்குகளை என்ன ஏது என்று தெரியாத வாக்கு போட போகும் பெரும்பான்மை அப்பாவி மக்களே தீர்மானிக்க போகின்றார்கள் என்பதே பெரும் சோகம்