கூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..!

147

1 . அரசியல் தீர்வு

2. சர்வதேச விசாரணை/ நீதி

3. அரசியல் கைதிகள் விடுவிப்பு

4. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி

5. தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பிலிருந்து நிலங்களை பாதுகாத்தல்

6. சிங்கள குடியேற்றங்கலை தடுத்து நிறுத்தல்

7. பௌத்தமயமாக்களை தடுத்து நிறுத்துதல்

8. வடக்கு கிழக்கு கடற்தொழிலை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்தல்

9. வடக்கு கிழக்கு மாகாணத்துக்கான நீர் முகாமைத்துவம்

10. வடக்கு கிழக்கு மாகாணத்துக்கான குடி நீர் தேவைகளை பூர்த்தி செய்தல்

11. விவசாய/விலங்கு வேளாண்மையில் தன்னிறைவு

12. மருத்துவத்துறை குறைபாடுகளை சீர்செய்தல் , சுதேச மருத்துவ அபிவிருத்தி

13. நவீன கல்வி கொள்கைகளை உருவாக்குதல்

14. சூழலை பாதிக்காத மாற்று சக்தி வள பயன்பாடுகளை ஊக்குவித்தல்

15. சூழலை பாதுகாத்தல் , மீள் வனமாக்கல் , கழிவு மீள் சுழற்சி

16 வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

17. தொழில்துறை , கைத்தொழில் பேட்டைகளை மீள உருவாக்கம்

18 . பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரம்

19. பெற்றோரை இழந்த சிறுவர்கள் , குழந்தைகளுக்கான செயல்திட்டம்

20. கிராமிய வளர்ச்சி திட்டங்கள்

21. இலஞ்சமற்ற வெளிப்படையான அரச நிருவாகத்தை உருவாக்குதல்

22. மது ,போதை ஒழிப்பு

23. விவசாயிகளை ஊக்குவிக்கும் செயலதிட்டங்களை உருவாக்குதல்

24. கடற்தொழில் அபிவிருத்தி

25. வணிக நிறுவனங்களை கட்டி எழுப்புதல்

26. திட்டமிட்ட நகரமயமாக்கல்

27. சுற்றுல்லா ஊக்குவிப்பு

28. கட்டுமான தொழில்துறை ஊக்குவிப்பு

29. பிராந்திய கனிம வளங்கள் பாதுகாப்பு

30. தமிழர் தொன்மையை அடையப்படுத்தல், ஆவண படுத்தல்

31. மொழி சமய வளர்ச்சிக்கு ஊக்குவித்தல்

32. புலம்பெயர் தமிழர் நலன் பேணல்

33. தமிழ் திரைத்துறை அபிவிருத்தி

34.சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொலைகள் , இனப்படுகொலைகள் , கலவரங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தல்

35. மக்களுக்காக இன்னுயிர் தந்த மாவீரர்களை அடையப்படுத்தல் , அவர்தம் குடும்பங்களுக்கான வாழவதாரங்களை உறுதிபடுத்தல்

36. கல்முனை , அக்கராயன் , கொடிகாமம் உட்பட பிரதேச செயலங்களை தரமுயர்த்தல்

37. அம்மாச்சி உணவகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல்

38. சிங்கள சிற்றுளியார்கள் அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு மாறாக நியமிக்கப்படுத்தலை தடுத்தல்

39. இராணுவ விருப்புக்கு ஏற்ப இயைவாக துணைவேந்தரை பணியில் இருந்து அகற்றுவதுவதை தடுத்தல்

கடந்த 4 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழரசு கட்சியிடம் மேற்குறித்த விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பும் சிவில் சமூக அமைப்புகள் , மாற்று அரசியல் கட்சிகள் , சாதாரண பொதுமக்கள் என சகல தரப்பினரும் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் . சாத்தியமற்ற விடயங்களை பேசுவதாக எள்ளி நகையாடப்படுகிறார்கள் . யதார்த்தமற்ற விடயங்களை பேசுவதாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

இனமொன்றின் குரல்