அன்பின் மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்கு…

265
 1. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருக்கிறது என வடக்கு மேடைகளில் உங்களை அருகில் வைத்து கொண்டு சுமந்திரன் பல இடங்களில் பொய் பேசி இருக்கிறார் . எப்போதாவது இடைக்கால அறிக்கையில் எந்த இடத்தில சமஸ்டி இருக்கிறது என திரு சுமந்திரனை கேட்டு இருக்கிறீர்களா ?
 2. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக திரு சுமந்திரன் பொய் சொல்லி ஏமாற்றிய பொது நீங்க அமைதியாக திரு சுமந்திரன் அருகில் இருந்தீர்கள் . எப்போதாவது இந்த பொய்களுக்கு துணை போனது குறித்து வருந்தி இருக்கிறீர்களா
 3. அரசமைப்பு பேரவையாக கூடிய பாராளமன்றத்தில் சமஸ்டியின் அடிப்படை பண்பான இறைமை பகிரப்பட்ட தேவை இல்லை என சொன்ன திரு சுமந்திரன் வடக்கு கிழக்கு மேடைகளில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு என பிரச்சாரம் செய்த போது உங்கள் அரசியல் அறம் எங்கு போனது ?
 4. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இருப்பதாக திரு சுமந்திரன் பிரச்சாரம் செய்த பொது உங்களுக்கு அருவருப்பாக இருக்கவில்லையா ?
 5. ஜெனீவா Fact Finding அறிக்கையில் Investigation Report என சொல்லப்பட்டு இருப்பதால் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என சுமந்திரன் விதண்டாவாதம் பேசிய போது நீங்கள் கட்சியின் தலைவராக ஏன் அமைதிகாதீர்கள்?
 6. 2015 பொது தேர்தல மேடைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என முழக்கமிட்ட திரு சுமந்திரன் , சம காலத்தில் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் பொது சர்வதேச மேற்பார்வை வேண்டும் என சொன்னார்..ஊடகங்களிடம் சர்வதேச விசாரணையும் சர்வதேச மேற்பார்வையும் ஒன்று என வியாக்கியானம் செய்தார். இது எல்லாம் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தவறான வாதம் என்பது உங்களுக்கு தெரியாதா ?
 7. மாமனிதர் ரவிராஜ் வழக்கு , குமாரபுரம் கொலை வழக்கு , திருகோணமலை 5 மாணவர் படுகொலை வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என சசுமந்திரனும் சம்பந்தனும் சொன்ன பொய்களை நீங்கள் நம்பினீர்களா ?
 8. நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் தொடர்ச்சியாக நடக்கும் போது சுமந்திரன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் எந்த குடியேற்றமும் நடக்கவில்லை என சாதித்தார் .இதை ஏன் நீங்கள் கேள்விக்கு உட்படுத்தவில்லை ?
 9. அரசியல் கைதிகளை விடுவிக்க தங்களிடம் திறப்பு இல்லை என சம்பந்தன் எகத்தாளம் பேசிய போது கட்சி தலைவராக உங்கள் நிலைபாடு என்னவாக இருந்தது ?
 10. தொல்லியல் திணைக்களம் தொடக்கம் வன வளத் திணைக்களம் வரை போட்டு போட்டு காணிகளை அபகரிக்க அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு திரு சுமந்திரன் 80 % ஆன காணிகள் விடுவிக்கப்பட்டதாக பொய் சொன்ன போது உங்களுக்கு கோவம் வரவில்லையா ?
 11. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவையில் நிராகரித்து விட்ட பின்னரும் அரசாங்கத்தோடு இணைந்து கால நீடிப்புக்கு திரு சுமந்திரன் வக்காலத்து வாங்கி துணை போன போதும் வடக்கு கிழக்கு மேடைகளில் கால நீடிப்பு அல்ல ஐ நா மேற்பார்வை என கதை சொன்ன போதும் திரு சுமந்திரன் அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் ?
 12. OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என தெரிந்து இருந்தும் திரு சுமந்திரன் காணாமல் போனோர் ஆணைக்குழுவிற்கு வக்காலத்து வாங்க கட்சி தலைவராக நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் ?
 13. உங்கள் கட்சி கொள்கையை மீறி திரு சம்பந்தன் சுமந்திரன் அமைச்சர்களுக்கு நிகராக சுதந்திர தினத்தில் பங்குபெற்றி தமிழ் மக்களுக்கு தேசிய உணர்வு இருக்க வேண்டும் என பாடம் நடத்திய போதும் தேசிய கொடி தேசிய கீதம் ஆகியவற்றை ஏற்று கொண்டதாக அறிவித்த போதும் நீங்க ஏன் அமைதியாக இருந்தீர்கள் ?
 14. உங்கள் கட்சி ஆட்சி அமைத்த வட மாகாணசபையை சுமந்திரன் அல்லக்கைகள் குழப்பி சீரழித்த பொது நீங்கள் அவர்கள் மீது கட்சி தலைவராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்த காரணம் என்ன ?
 15. தமிழ் தேசிய அரசியலுக்கு சம்பந்தமில்லாத பலரை தெற்கில் இருந்து அழைத்து வந்து வடக்கில் மகளிர் தினம் , மே தினம் என கொண்டடாட்டங்களை நடத்திய போதும் நீங்கள் ஏன் பேசவில்லை ?
 16. கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசியல் நீங்கள் அங்கம் வகித்தீர்கள் .திரு சுமந்திரன் திரு சம்பந்தன் ஆகியோருக்கு தனிப்பட்ட நலன்கள் பல வழங்கப்பட்டன.அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள் வழங்கப்பட்டன .ஆனால் உங்க கட்சி கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்ன விடயங்களில் ஒன்றை கூட நிறைவேற்ற முடியாமல் போனததற்க்கு யார் காரணம் ?
 17. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொது மைத்திரிபால சிறிசேனா சமஸ்டி அரசியல் அமைப்புக்கு உடன்பட்டதாக திரு சுமந்திரன் பொய் சொன்ன பொது நீங்கள் அவரை பொய் சொல்லுவதற்கான காரணம் குறித்து விசாரித்தீர்களா ?

தமிழ் தேசிய அரசியல் என்பது வியாபாரமல்ல . உங்களிடமும் உங்கள் கட்சியிடமும் அப்பாவி மக்கள் நேர்மையைத் எதிர்பார்க்கிறார்கள். அரசியல் அரங்கில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு நியாயம்/தீர்வு கிடைக்காவிட்டால் மக்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆனால் தம்மை தமது அரசியல் பிரதிநிதிகள் ஏமாற்றக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்வது ஜனாயக அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது. தேர்தல் அரசியல் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையீனத்தை மோசமடையச் செய்யாமல் இருக்க தேவையானது

நன்றி

Shaila –