கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பிரதிநிதிகள் மத்திய அரசின் பங்காளிகளாக இருந்தார்கள் . இந்த காலப்பகுதியில் தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து தாங்கள் திருப்தி அடைவதாக சர்வதேச ரீதியாக பிரச்சாரமும் செய்து வந்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதித்துறை அப்பாவி தமிழர் படுகொலை வழக்குகளுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ச்சியாக விடுதலை செய்து வந்தது . அவற்றுள் சில
- மாமனிதர் ரவிராஜ் படுகொலை வழக்கு :24 டிசம்பர் 2016 அன்று நீதிமன்ற ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தார்
- திருகோணமலை குமரபுரம் 24 பொதுமக்கள் படுகொலை வழக்கு : 2016 ஜூலை 27 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் விடுதலை செய்தார்.
- திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கு: 2019 ஜூலை 3 அன்று குற்றம் சாட்டப்பட்ட 13 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்
- அக்சன் பாம் என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை வழக்கு : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களும் போதிய ஆதாரங்கள முன்வைக்கத் தவறியதாக சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
இது தவிர பொதுமக்களின் காணிகள் தொடர்பான வழக்குகளிலும் , சட்டவிரோத விகாரைகள் / புத்தர் சிலை வழக்குகளிலும் தமிழ் பொதுமக்களுக்கு எதிராகவும் தீர்ப்புகள் எழுதப்பட்டன.அவற்றில் சில,
- எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் என சொல்லப்படுகிற இடத்தில இலங்கை ராணுவம் ஒன்றை 71 வயதான அம்மாவின் 54 ஏக்கர் காணியை அபகரித்து 52 பிரிவின் தலைமையகம் அமைத்து இருக்கிறார்கள் .2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் உள்ள . மேல்முறையீட்டு நீதிமன்றம் (CoA), இந்த காணி தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் காணிகளை ராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. சிங்கள நீதிபதி மஹிந்த சமயவர்தன “தேங்காய்களைப் பிடுங்குவது/ தென்னைகளை நடுவது தேசிய பாதுகாப்பை விட முக்கியமானது அல்ல” என்று கூறி தனது தீர்ப்பில் அந்த அம்மாவை ஏளனம் செய்து இருந்தார்
அதே போல நாவற்குழி பௌத்த விகாரை தொடக்கம் முல்லைத்தீவு நீராவியடி புத்தர் சிலை வரையான எண்ணற்ற வழக்குகளில் தமிழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் கிழித்தெறியப்பட்டன. ஆனால் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் மேற்குறித்த எந்த வழக்குகளை மத்திய அரசியல் பங்காளிகள் என்கிற அடிப்படையில் அரசியல் ரீதியாக சவாலுக்கு உட்படுத்தவில்லை.மாறாக மத்திய அரசியின் சலுகைகளை அனுபவித்தவாறு மத்திய ரணில் அரசாங்கம் பயங்கவராத தடை சட்டத்திற்கு பதிலாக CTA கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு துணை நின்றார்கள். தமிழ அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சர தலதா அத்துகோரளை பாராளமன்றத்தில் பேசிய போது அரசியல் கைதிகளை விடுவிக்க தங்களிடம் திறப்புகள் இல்லை என எகத்தாளம் பேசினார்கள்
ஆனால் காலத்திற்கு காலம் அரசியல் ரீதியான இலாபங்களுக்காக நீதிமன்றதை பயன்படுத்தினார்கள் ..அப்படியான வழக்குகளில் கன்னியா வெந்நீர் ஊற்று வழக்கு முதன்மையானது . இப்போது அந்த வழக்கு பற்றி யாரும் பேசுவதில்லை . பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்று கொடுப்பட்ட நீதி என்ன என்பது பற்றியும் யாரும் கேட்பதில்லை
இப்போது மிருசுவில் படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என உயர் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்ட சுனில் ரத்னாயக்க கோட்டாபய ராஜபக்ச அவர்களால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார் . இந்த விடுதலைக்கு எதிராக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை முன்வைக்க போவதாக பொது அறிவித்தல் கொடுத்து இருந்தார் .இது தொடர்ப்பன செய்திகள் பத்திரிகைகளிலும் வந்து இருந்தது
ஆனால் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா அவர்களின் அனுசரணை இன்றி திடீரெண்டு சயந்தன் சுமந்திரன் தரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது
இனி என்ன நடக்கும்
வழக்கு இன்னும் ஒரு 10 வருஷம் நடக்கும் . அதற்க்கு இடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது . ஆனால் மக்களுக்கு சட்ட நீதி பெற்று கொடுக்க போராடுவதாக வாக்கு கேட்பார்கள் . பாராளமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இந்த வழக்கும் மறக்கப்பட்டு விடும்
திரு அருந்தவபாலன் தொடக்கம் பேராசிரியர் சிற்றம்பலம் வரை ஏமாற்றப்பட்ட தமிழ தேசிய அரசியல் வாதிகள் வரிசையில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜாவும் இப்போது சேர்ந்து கொள்ளுகிறார் ..அவ்வளவு தான்
Shaila