எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே வெல்வது சந்தேகம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும், தமிழ் அரசு கட்சியிலிருந்தும் பலரும் வெளியேறி செல்வதற்கு காரணமான சுமந்திரன், தமிழ் மக்களை கொன்று குவித்த விசேட அதிரடிப்படையை காப்பாற்ற என்னை கட்சியிலிருந்து நீக்க கோரியிருப்பது எமது கட்சியின் கொள்கை, இலட்சியப்பாதை எத்திசை நோக்கி செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார் .
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் மூத்த தலைவர்களிற்கு அவர் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .