இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் வெளியேறும் நிலையில் உள்ளதாகக் உறுதிப்படுத்தாத செய்திகள் கூறுகிறது ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு யாழில் மூன்று ஆசனங்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்றதால் விருப்பு வாக்குகளில் சிறிதரன் சுமந்திரன் மற்றும் சசிகலா ரவிராஜ் இதை விடவும் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதன் காரணமாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் மற்றும் சரவணபவன் ஆகியோர் வெளியேறும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய சிக்கல்களை எதிர் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
மீதி உள்ளவர்கள்,தோற்றவர்கள் வாக்குகள் விருப்பு வாக்கு இழுபறியில் உள்ளதுடன்,சுமந்திரன் அன் கோ,விருப்பு வாக்குகளை மற்றவர்களிடம் இருந்து கைப்பற்றுவதற்கான வேலைகளை கடுமையாக முன்னெடுத்துள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன….