கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகள்!

149

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழரசுக் கட்சிக்கு எதிராக, 20 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளும், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், பளை பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகளும், பூநகரி பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் 1முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின்னர், கிளிநொச்சியில் உள்ள தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களால் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து வெடி கொளுத்தியமை, அச்சுறுத்தியமை, உடமைகளுக்குச் சேதம் விளைவித்தமை, தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.