இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் இன்று 15.08.2020 திருகோணமலையில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றது.
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணனாயகம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞான சிறிதரன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் பின்னராக செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன் அவர்கள் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதாகவும் அனைவரது கருத்துக்களும் கேட்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் தேசியப்பட்டியல் நியமணம் சம்பந்தமாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டதுடன் கட்சியின் மத்திய குழு எதிர்வரும் 29ம் திகதி வவுனியாவில் கூடவுள்ளதாகவும் அதில் மற்றைய முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.