தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக இன்று (29) சற்றுமுன் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்க் குழு கூட்டத்திலேயே இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் தெரிவு தொடர்பில் கட்சியின் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமை, கடிதம் எழுதியமை மற்றும் ஊடக சந்திப்பை தன்னிச்சையாக நடத்தியமை உள்ளிட்ட காணரங்களுக்காகவே இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடனயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.