கூட்டமைப்புக்குள் மீண்டும் மீண்டும் குத்துவெட்டு – ஒருவருக்கொருவர் அரசியல் தூது விடும் எம்பிக்கள்

77

ஈழ அரசியலை தற்போது குத்தகைக்கு எடுத்துகொண்டுள்ள கூட்டமைப்புக்குள் இதுவரை காலமும் காணப்பட்ட தனிநபர் மோதல் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக கட்சி இரண்டாக பிரிவடைந்துள்ளது.சப்றா சராவுக்கும்,பின்வாசலினால் வந்த சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதல்களின் பின்விளைவுகளை ஒரு எல்லைக்கு அப்பால் பொறுக்கமுடியாத சரவணபவன் எம்பி களத்தில் குதித்துள்ளார்.முதற்கட்டமாக கிளிநொச்சி ஜமீன் சிறிதரனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு தூது அனுப்பியுள்ளார்.ஏற்கனவே இருந்த பனிப்போர்கள் மனகசப்புக்களை மறந்து சுமந்திரனுக்கு எதிராக தாம் ஒன்றிணைய வேண்டிய தேவையை சராவின் தூதுக்குழு சிறிதரனுக்கு எடுத்தியம்பியுள்ளது.எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுகொண்டிருந்த சிறிதரன்.எல்லாம் சரிதான் , ஆனால் இந்த விசயத்தின் “கட்டையன் சரவணபவனை நம்பமுடியாது அவன் தேர்ந்தெடுத்த ஏமாற்றுபேர்வழி” என்று தூது குழுவுடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.இதனால் மனமுடைந்துள்ள சரவணபவன் ஏற்கனவே உள்ள எதிரி சுமந்திரனுடன் சேர்த்து சிறிதரனுக்கும் எதிரான தாக்குதல்களை தனது உதயன் பத்திரிகையின் மூலமாக தீவிரபடுத்த திட்டமிட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் அண்மிக்கும் காலத்தில் சுமந்திரன் சிறிதரன் மீதான ஊடக தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இதற்கிடையில் சுமந்திரன்,தனது கீழ்மட்ட விசுவாசிகளுடன் வழமையான தனது நரிதனமாக தந்திரங்களில் இறங்கியுள்ளார்.இதன் ஒவ்வொரு கட்டமாக,தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தும் நோக்கிலான வேலைதிட்டங்களை மேற்கொள்ள உள்ளார்.அதனுடன் தனது அரசியல் எதிரிகளான சரவணபவன்,சிறிதரன் ஒன்று சேராமல் பார்த்து கொள்வதிலும் கவனமாக உள்ளார்.கிளிநொச்சியை தனது சொந்த கட்டுபாட்டு பிரதேசமாக கனவு காணும் சிறிதரனுக்கு அங்கு எந்த அரசியல்வாதிகளையும் உள்ள விடுவதில் உடன்பாடு இல்லை.ஆனால் தற்போது சுமந்திரன் அங்கு உள்ள இளையவர்கள் சிலரை ஒன்றிணைத்து சில கூட்டங்களை நடத்தியுள்ளார்.இதே போல் சரவணபவனும் கிளிநொச்சியில் தனது பக்கமாக சில குழுவை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இங்கு சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கும்தான் அதிகமான ஓட்டுக்களை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஆனால் சிறிதரன் இதற்கு முன்னரே தனது பலமான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டுள்ளதால்,அவர் தேர்தலில் இவர்களுக்கு பதிலடி கொடுக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளார்.

இதற்கிடையில் இந்த தேர்தல் சம்பந்தருக்கு இறுதி தேர்தலாக இருக்கும் பட்சத்தில்,கூட்டமைப்பு,தமிழரசு கட்சிக்கும் இறுதி தேர்தலாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.

  • கரன்