நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 09 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை,
ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைக்கப்பெறுகின்றமையால் அந்தக் கட்சியிலிருந்தும் மேலும் ஒருவர் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பத்து உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உறுப்பினர்கள் இருவரும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.