வவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்!

206

இன்று முற்பகல் 10.30 அளவில் தமிழரசு மத்தியகுழு இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின்னர் கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் வெளியிடப்படுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடியுள்ளது.

முன்னதாக, கடந்த 15 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பிலும், மத்திய குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக, அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் கருத்துகள் வெளியாகியிருந்தன.

எனினும், அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர், அதன் பிரதம அமைப்பாளர், பேச்சாளர் முதலான பதவிகள் குறித்து, நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.