சுமார் 398 வருடங்களுக்கு முன்னர்,இலங்கையில் திருக்கோணேஸ்வரத்தில் தமிழ் சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
அதற்கு சான்று போர்த்துக்கீச குறிப்புகளில் உள்ளன.1622ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் அப்போதைய போர்த்துக்கேயத் தளபதியாக இருந்த கொன்ஸ்டன் டைன் டீசா கோவிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதி ஒன்றினை மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.
போர்த்துக்கேயர் இக்கோவிலை இடித்து அந்தக் கற்களை கொண்டே திருகோணமலை கோட்டையை கைப்பற்றியதாக வரலாறுகள் கூறுகிறது. அக்கோட்டையின் அருகே சேர்ச்சும்,கிறிஸ்தவ கிராமமும் அமைக்கப்பட்டது. தமிழ் பேசும் இடங்களில் கட்டாய மதமாற்றம் நிகழ்ந்தது.
திருக்கோணேஸ்வரத்தின் சிறப்புக்கள்..
- தேவார பாடல் பெற்ற திருத்தலம்
- கந்தபுராணத்தில் போற்றப்படும் திருத்தலம்
- முதலாம் நூற்றாண்டை சேர்ந்த லத்தீன் நூலான அவியெனும் நூலில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
- மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கிரேக்க நூலான டையொனிஸியுஸ் எனும் நூலில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
- யோக சூத்திரங்களை உலகிற்கு அருளிய பதஞ்சலி சித்தர் தோன்றிய திருத்தலம்
இவ்வாறு பல சிறப்புக்களையும், பெருமைகளையும் கொண்டது திருக்கோணேஸ்வரம்.
ஆதாரம் – தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம்
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
– Babugi