அகாலமாகும் அகிம்சை வழிகள்

81

அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர்
இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார்

இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார்.

அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்.

இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.

இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே.

ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை.

காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம்.

இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம்.

துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள்.

எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்?