அமெரிக்க மக்களின் வாழ்க்கையுடன் சீனா விளையாடுகின்றது – ட்ரம்ப் குற்றசாட்டு

106

அமெரிக்க மக்களின் வாழ்க்கையுடன் சீனா விளையாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.நேற்று வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது சீன அரசு தனது நாட்டில் இருந்து பரவிய கொரானா (கொவிட் 19) வைரஸை கட்டுபடுத்த தவறியதால்,அமெரிக்க மக்கள் அதற்கு பெரிய ஒரு விலையை கொடுத்து கொண்டிருப்பதாக தெரிவித்த ரம்ப்,மேலுல் சீன தனது பிழைகளுக்கான பொறுப்புகூறல்களில் இருந்து தொடர்ந்து தப்பித்துகொள்வது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும் என்று குறிப்பிட்டார்.தாம் சந்தித்துள்ள துன்பமான துயரமான இந்த அவசர நிலையை அமெரிக்க அரசும் மக்களும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இதுவரை அதிகபட்சமாக ஒரு மில்லியன் மக்கள் கோரானா பொஸிட்டிவ்வினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்,இதுவரை 130000 பேர் குணமடைந்துள்ளனர்.64000 கொரானா மரணங்கள் இதுவரை சந்தித்து பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளமை குறிப்பிடதக்கது.