TRP யும் அர்னாப் கோஸ்வாமியும்..

120

TRP

Television Rating Point

நாம YouTube ல பொதுவா ஒரு Channel நல்ல content தராங்களா.. Popular ஆன channel ah னு views & subscribers பாத்து கண்டுபிடிச்சிருவோம். 1 Million க்கு மேல ஒரு channel க்கு Subscribers இருந்தாங்கனா, நாமலும் அந்த channel ah பிடிக்கிதா இல்லையானு கட்டயாம் ஒரு தடவ open பன்னி பாப்போம்.

அதயே TV க்கு பன்றது தான் TRP என்று சொல்லக்கூடிய Television Rating Point.

இந்த TRP காக தான் இப்போ விசய் டிவியும் சன் டிவி யும் சண்ட போட்டுக்கறாங்க.

சரி YouTube channel னா நமக்கே views & Subscribers எல்லாம் காட்டுது. அத வச்சு இந்த channel popular ah இல்லையானு நாம கணக்கு பன்னிடறோம். இந்த TRP எப்படி கண்டுபிடிக்கிறது?

இத எப்படி கண்டுபிடிக்கிறது னு பாக்குறதுக்கு முன்னாடி எப்படி கணக்கு பன்றாங்கனு பாப்போம்.

இந்த TRP மொத்ததயும் calculate பன்றது BARC ( Broadcast Audience Research Council) என்று சொல்லக்கூடிய ஒரு அமைப்பு தான்.

BARC ஓட website குள்ள போனாலே weekly data னு விசாலகிழம விசாலகிழம இந்த data வ update செய்வாங்க. அதுல top 10 channel ல இருந்து எவ்ளோ மக்கள் எவ்ளோ நேரம் இந்த channel பாக்குறாங்கனு புட்டு புட்டு வச்சிருப்பான்.

நம்ம நாட்ல election எல்லாம் முடிஞ்ச அப்றம் ஒரு கருத்துகணிப்பு எடுப்பாங்க. Exit polls னு.
ஒரு மாவட்டத்துக்கு குறிப்பிட்ட பூத்துக்கு போய் யாருக்கு ஓட்டு போட்டிங்கனு கேள்வி கேப்பாங்க. இது தான் exit polls. இந்த exit polls ah 3000 பூத் தமிழ்நாட்டில இருக்குனா sample ah 1200 பூத்ல எடுப்பாங்க.

இந்த election ல எடப்பாடி யா ஸ்டாலினானு exit polls லயே முடிவு வெளியாகிடும். Result வரைக்கும் காத்திருக்க தேவையில்ல.

அதே போல தான் எல்லாத்தோட வீட்டிலயும் போய் யாரு யாரு செம்பருத்தி serial பாக்குறாங்க.. யாரு யாரு கண்ணமா serial பாக்குறாங்கனு BARC கணக்கு பன்ன மாட்டாங்க. Sample ah ஒரு 10000 people meter அ நம்ம டிவி க்குள்ள சொருகி விட்ருவாங்க. இது டிவி ல இருக்கும், remote ல இருக்கும். ஏன் நம்ம வீட்டு சுவத்துல கூட இருக்கும். ஆனா எங்க இருக்குனு யாருக்குமே தெரியாது. ஏன் BARC க்கு கூட தெரியாது. ஆனா அந்த ஒருத்தர தவிர..

அவங்க தான் Hansa Research Group. இந்த People meter ah install செய்ய BARC hire பன்ன team தான் Hansa Research group.

இப்போ இந்த TRP மூலமா Channel க்கு என்ன லாபம்?

இதுக்கு விடை நாம எல்லாத்துக்குமே தெரிஞ்சது தான். Advertisement.

ஒரு சேனல்க்கு TRP அதிகமா இருக்குனா, அத அதிக அளவில மக்கள் விரும்பி பாக்குறாங்கனு அர்த்தம். இப்போ அதிக மக்கள் பாக்குற இடத்தில நம்ம Product ஓட ad போட்டா, அது அதிக அளவில reach ஆகும்.

ஆனா TRP அதிகம் இருக்க ஒரு channel கம்மி காசுல ad போடுவானா. கிடையவே கிடையாது. Company காரன்ட அவன் producta channel ல போட அதிக காசு வாங்குவான். இப்படி தான் நடந்துட்டு வருது இந்த TRP business. சன் டிவி ல ஒரு ad க்கு வாங்குற காசையும் ராஜ் டிவி ல ad க்கு வாங்குற காசையும் தீர்மானிக்கும் ஒரு கருவியாக தான் TRP இப்போ செயல்படுகிறது.

இந்த TRP ய manipulate பன்னதாக, அதாவது fraud பன்னி அதிகமாக்கினதுகாக தான் இப்போ republic tv மேல குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்ளோ secret நடக்கிற விடயத்துல எப்படி fraud பன்ன முடியும்?

இதுக்கும் பதில் நாம எல்லாத்துக்குமே தெரிஞ்சது தான். Hansa research team க்கு மட்டும் தான் TRP ய calculate பன்ற People meter எங்க இருக்குனு தெரியும். இப்போ விஷ்ணு னு நா ஒரு channel வச்சிருக்கேன். என் சொந்தகாரன் Hansa team ல வேல பாக்குறான். அவன நா கரெக்ட் பன்னி எந்தெந்த வீட்டில People meter க்கு இருக்குன்ற data வ வாங்கிருவேன்.

இப்போ people meter ல இருக்குற வீட்டுக்கு போய் 500 ரூவாயோ 1000 ரூவாயோ கொடுத்து, ” நீங்க எதுமே பன்ன வேணாம், என் சேனல மட்டும் டிவி ல போட்டு விட்ருங்க” னு சொல்லிடுவேன். அப்றம் எனக்கு automatic ah TRP ஏற ஆரமிக்கும். இதேபோல ஒரு 100 வீட்டில பன்னேனா top 10 பட்டியல்ல என் சேனல் வருதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிடும்.

இத தான் Republic Tv செஞ்சிருக்காங்க.

இத கலையவே முடியாதா னு கேட்டா, நிச்சயம் முடியும். அதுக்கு மொதல TRP systema மாத்தனும். இன்னிக்கு எவ்ளவோ advanced technology வந்தும், நாம இன்னும் பழைய method ah தான் follow பன்றோம்.

இதனால லாபம் அடையிறது மக்களோ, advertisement போடுற கம்பெனி காரனோ கிடையாது. காலம் காலமா தன்னோட தொலைக்காட்சி மூலம் மதக்கலவரத்தையும் தூண்டும் அர்னாப் கோஸ்வாமி யும். Journalism என்னும் பெயரில Big boss ல சிவானி க்கு என்னாச்சு னு நம்ம மூளைய மழுங்கடிச்சு, அன்றாட பிரச்சினை ல இருந்து நம்மல திசை திருப்ப நினைக்கும் விசய்டிவி காரனும் தான்.

நன்றி🙏