கறுப்பின இளைஞர் படுகொலைக்கு நீதி கேட்டு ஆரம்பித்த போராட்டம்,டொனால்ட் ரம்ப் காவல்துறை கொண்டு அடக்க முயன்றதால் நாடு பெரும் வன்முறையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மக்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ள ரம்ப்,தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.இதே வேளை இன்று பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்ற ரம்ப் அங்கு தன்னை வைத்து படபிடிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அருகே கூடிய மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து கொண்டிருக்க,ரம்ப் கூலாக போட்டோஷூட் எடுத்து முடித்திருந்தார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி மக்கள் கோபத்தை தூண்டியுள்ளது.
அந்த வீடியோவில் ரம்ப்,பைபிளை தலைகீழாக பின் பக்கமாக பிடித்து கொண்டுள்ளார்.இது கிறிஸ்தவ மத பாரம்பரியங்களையும் பைபிளையும் அவமதிக்கும் செயல் என கொதித்தெழுந்துள்ள அமெரிக்க மக்கள்,இவரை எப்படி ஒரு ஜனாதிபதியாக தேர்வு செய்தோம் என்று தங்களை தாங்களே நொந்து கொண்டுள்ளனர்.இதே ஒபாமா பைபிளை தலைகீழாக பிடித்திருந்தார் இன்று anti-christ ஆக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் மானபங்கப்படுத்தப்பட்டிருப்பார்.ஆனால் அமெரிக்க மேல்தட்டு சமூகத்தின் கள்ள மெளனம்,அமெரிக்காவை தாண்டி உலக மக்களுக்கே முக்கியமான ஒரு விசயத்தை சொல்கின்றது.சொந்த நாட்டு மக்களையே இவ்வளவு கேவலமாக நடத்துகின்ற அமெரிக்க அரசு,எப்படி தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அடுத்த நாடுகளுக்குள் புகுந்து என்னவெல்லாம் செய்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.