அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரானா மரணங்கள், மக்களிடையே வலுக்கும் ட்ரம்ப் எதிர்ப்புவாதம்

57

அமெரிக்காவில் கொரானா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்துள்ள நிலையில்,17000 மேற்பட்டவர்கள் இதுவரையில் இறந்துள்ளனர்.

தொடர்ந்தும் மக்கள் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படும் வேளையில் அமெரிக்க மக்களிடையே டொனால்ட் ரம்ப் எதிர்ப்புவாதம் முன்னிலை பெற்றுள்ளது.டொனால்ட் ரம்பின் தவாறான முடிவுகளே அமெரிக்க இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி காரணம் என குமுறும் மக்கள் கோபத்தின் உச்சியில் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் அவசரகாலநிலையை எதிர்கொள்ள இருந்த அமைப்பை டொனால்ட் ரம்ப் செலவீனங்களை கட்டுபடுத்தும் நோக்கில் 2019ல் கலைத்தமை குறிப்பிடதக்கது.

மேலும் கொரானா அபாயம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எல்லாவற்றுக்கும் தான் பொறுப்பெடுத்து கொள்ளமுடியாது என்று சர்ச்சையாக பேசியதும் மக்களின் கோபத்தை தீண்டியுள்ளது