இருளில் மூழ்க போகும் உலகம்,அச்சமூட்டும் தடுப்பூசி உலக அரசியல் பகுதி – 1

130

“நான் ஒரு தடுப்பூசி மறுப்பாளர்”. தடுப்பூசி பற்றி கேள்வி எழுப்ப, ஒரு தாயாக, ஒரு வாடிக்கையாளராக இவ்விரண்டு தகுதிகளே போதுமானது. அதனால் ஓமியோபதியை சுட்டி மடைமாற்றும் விவாதங்களுடன் யாரும் இங்கு வரவேண்டாம். ஓமியோபதிக்கு தனியாக பேசுவோம். இப்போ இங்கு தடுப்பூசி மட்டுமே பேசுபொருள்.

“தடுப்பூசி அரசியல் மிகப்பிரம்மாண்டமானது”, இந்த ஒற்றை சொற்றடரில் இதை இத்தனை ஆண்டுகளாக நான் கடந்தும், தவிர்த்திம் வந்திருக்கிறேன்.

காரணம் உண்டு. நான் பலமுறை கவனித்து இருக்கிறேன்.

ஒரு குழந்தை தடுப்பூசி போட்டு இறந்துவிட்டால், பெற்றோர் மற்றும் சுற்றத்தார் அதற்கு அரசின் கவன ஈர்ப்பு வேண்டி போராட்டம் செய்தாலொழிய ஊடகங்கள் கூட இதை பேசுவதில்லை. அப்போதும் கூட, இத்திரைக்கதையில், தடுப்பூசியை சரியாக கையாளாவில்லை என்று ஒரு அப்பாவி செவிலியரோ, கடைநிலை மருத்துவ ஊழியரோ தான் இதற்கு பலிகடா ஆக்கப்படுவார். அதாவது, தடுப்பூசியை முறையாக பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை போன்ற காரணமே சொல்லப்படும். தடுப்பூசி தயாரிப்பிலேயே கலப்படமானால் கூட அந்த தடுப்பூசி மருந்து நிறுவனத்தின் மீதும் எந்தக்கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. மருந்து நிறுவனங்களிலேயே, தடுப்பூசி நிறுவனங்களுக்கு மட்டும்தான் உலகில் சட்டப்பாதுகாப்பு உள்ளது. நீங்கள் ஒரு தடுப்பூசி நிறுவனம் மீது அதன் தரத்தின் அடிப்படையில் கூட, அதன் மீது வழக்கு தொடர முடியாது.

தடுப்பூசியை பரிந்துரைத்த, விற்ற, மருத்துவருக்கும் இதற்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை.

தடுப்பூசி அறிவியல் மீது அப்பழுக்கற்ற நம்பிக்கைமூலம்

தடுப்பூசி மரணங்கள் மற்றும் பாதகங்களை ஒரு மருத்துவர், ஒருபோதும் கேள்விக்குட்படுத்தாமல்

மிகச்சுலபமாக கடப்பதற்கு அவரது கல்வியிலேயே மூளைச்சலவை மசாலாக்கள் திணிக்கப்பட்டிருக்கும்.

தடுப்பூசி வணிகம், தடுப்பூசி கையாள்வது, தடுப்பூசியில் மருத்துவ அறம், இப்படி இதில் எந்த கோணத்தில் தவறு நடந்தாலும், தடுப்பூசி அறிவியல்

மீது மட்டும் எப்போதுமே யாருமே சந்தேகமில்லாத நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் ஓதப்படும் மந்திரம் ஆகும்.

தடுப்பூசி வணிகம், எதில் தான் வணிகம் இல்லை. அப்பிரச்சனையை சீர்செய்வோம். அதற்காக தடுப்பூசியையே மறுப்பதா?

தடுப்பூசி கையாள்வது, அந்த குறிப்பிட்ட செவிலியர் என்ற பலிகடா இருப்பதால் இங்கும் தடுப்பூசி தப்பிவிடும்.

தடுப்பூசி மருத்துவ அறம், அறமா? அதை யார் வகுக்கிறார்கள்? யாருக்காக வகுக்கிறார்கள்? என்று பார்க்கவேண்டும். இதில் பல ஓட்டைகள் உள்ளன.

இப்படி, எந்த தவறு நடந்தாலும், தடுப்பூசி அறிவியல் மட்டும் அப்பழுக்கற்றது, புனிதமானது, முற்றிலும் நன்மையானது போன்ற பிம்பங்கள் கட்டப்பட்டுள்ளது.

அதனாலேயே, அடிநாதமான இதன் அறிவியலிலேயே பிழை உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்றே மற்றவற்றை பெரிதாக பேசியதில்லை.

ஆனால் எனதன்பு கொரோனாவோ, இல்லை.. இல்லை.. இனி அனைத்தையும் பேசுவோம், வா.. என அழைக்கிறது.

சரி பேசுவோம்.

29ம் தேதி இரவு 2மணிக்கு முக்கியச்செய்தியாக கண்ணில் படுகிறது இது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் , உலகசுகாதாரமையத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவிக்கிறார்.

அந்த 9நிமிட செய்தியாளர் அறிவிப்பில், நொடிக்கு நொடி அவர் சாடுவது சீனாவைத்தான்.

உலகசுகாதார மையம், சீனாவிற்கு சாதகமாகவும் தங்களுக்கும் பாதகமாகவும் நடந்துவருவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். இதை இவர் கொரோனா ஆரம்ப மார்ச்சிலேயே சொன்னதுதான்.

ஆனால் இக்காரணத்தாலேயே, உ.சு.மை யத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிக்கிறார்.

சுவிட்ஸலாந்தின் ஜெனிவாவில் தலைமை இடத்தை கொண்டு , உலகின் 190 நாடுகளுக்கு மேல், மருத்துவம் சார்ந்து வழிகாட்டும் உ.சு.மை, ஆண்டொன்றுக்கு 450 மில்லியன் டாலர்(3500கோடி) நிதிஉதவி அளிக்கும் அமெரிக்காவைவிட,

வெறும் 45 மில்லியன் டாலர்(அமெரிக்காவின் பத்தில் ஒரு பங்கு) மட்டுமே தரும் சீனாவின் மீது அப்படி என்ன மோகம் இருந்து விடமுடியும்?

இங்கு ஒரு அமெரிக்க அதிபர் என்ற இடத்தில் இப்போது இருக்கும் டிரம்ப் யார் என்று ஒரு சிறிய அறிமுகமாவது வேண்டும். (தடுப்பூசி பார்வையில் பார்த்ததை சுருக்கமாக சொல்கிறேன்).

பல ஆண்டுகளாக அமெரிக்க அரசியலின் முக்கிய பைனான்ஸியராக இருந்த ஒரு பிரம்மாண்டமான வணிகர் தான் டிரம்ப். அங்கு இரு பிரதான கட்சிகளே அரசு அமைக்கின்றன. ரிபப்ளிக் மற்றும் டெமாகிரடிக்.

இப்படிப்பட்ட பைனான்ஸியர்களின் உதவியோடு வெற்றி பெரும் அதிபர்கள், அதனாலேயே இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்கள். எந்த கட்சியானாலும் இதே நிலைதான். (அமெரிக்கா மட்டுமில்லை. மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும். இந்தியாவிற்கும்.)

ஒரு கட்டத்தில் அவருக்கு, ஏன் தானே அதிபராகக்கூடாது என்ற நிரப்பந்தம்(? இது வேறு அரசியல்) ஏற்பட, ரிபப்ளிக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.

டெமாகிரடிக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் , வரலாற்றின் முதல் பெண் அமெரிக்க அதிபராக வரப்போகிறார் என்ற ஏகோபித்த எதிர்பார்ப்பு எழுகிறது. இந்த காரணத்திற்காகவே பழம்பெரும் அரசியல்தலைவர் பெர்னி ஸேன்டர்ஸ் பின்னுக்குத்தள்ளி ஹிலாரி, அதிபர் வேட்பளாராக டிரம்ப்பை எதிர்கொள்கிறார்.

ஹிலாரி தான் வெற்றி பெறுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பை முறியடித்து, அதிபராக வெற்றி பெறுகிறார் டிரம்ப்.

இத்தனைக்கும் டிரம்ப் மீது, இனவாதி, அரசியல் கோமாளி, பெரு வணிகன் என்ற பல அவப்பெயர்கள் அம்மக்களிடையே உண்டு.

இங்கே ஒரு முக்கிய விசயத்தை நீங்கள் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.

டிரம்ப் தனது தேர்தல் செலவுகளுக்கு தனது வணிக நிறுவனங்களின் முதலீட்டை மட்டுமே உபயோகித்தார். மற்ற ரிபப்ளிக் ஆதரவு முதலீட்டார்களின் உதவியை அவர் மறுத்து விட்டார். அதாவது , இப்போது ஒரு அமெரிக்க அதிபர், எந்த வணிக முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் அரசியல் முடிவுகளை தானே எடுக்க முடியும் என்கிற இடத்தில் இருக்கிறார்.

அதுவரையிலும் அரசாண்ட அமெரிக்க அதிபர்களுக்கு, ஒபாமா உட்பட, இல்லாத ஒரு பிரம்மாஸ்திரம் இப்போது டிரம்பிடம் உள்ளது.

டிரம்ப், ஹிலாரி இருவரும் தடுப்பூசி ஆதரவில் எடுத்த நுட்பமான அரசியல் பிண்ணணி என்ன?

உ.சு.மை சீனாவிற்கு அடிபனிந்து நடக்கிறது. டிரம்பின் இந்தக்குற்றசாட்டில் உண்மை இருக்கிறதா?

டிரம்ப் உ.சு.மையத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்ற அறிவித்த அதே நன்னாளில், இனவாதகொலையை கண்டித்து நடைபெற்று வந்த அமைதிப் போராட்டத்தில் திடீரென வெடித்திருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?

பேசுவோம் அடுத்த பகுதியில்.

தொடரும்…

நான் கடந்த 9ஆண்டுகளாக கவனித்து வரும் தடுப்பூசி அரசியலில் புரிந்துகொண்டதையே எழுதுகிறேன். ஏதும் பிழை இருப்பின் தக்க சான்றோடு பிழை திருத்தினால் நன்றியோடு ஏற்று திருத்திக்கொள்கிறேன்.

Dr.கோ.பிரேமா MD (hom)c