இறுதி நேரத்தில் எம்மீது சேறு பூசும் நடவடிக்கையில் மாற்றுக் கட்சிகள் – கஜேந்திரகுமார்!

திரை மறைவிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக கடைசி நாளிலே தேர்தல் பிரச்சாரங்களில் போலியான செய்திகளைப் பரப்பி ஊடகங்கள் ஊடாக மேற்கொள்வதற்கான திட்டங்களை அரசதரப்பு கட்சிகளும், எமக்கு சவாலாக நிற்கின்ற கட்சிகளும் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றரை ஒழுங்குபடுத்தி இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி. அங்கு உரையாற்றும் பொழுதே இக் இக்கருத்தினை முன்வைத்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

மக்கள் மத்தியிலே முன்னணியினருக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில். அந்த ஆதரவை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இவர்கள் தயாராகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் புலம்பெயர் தேசத்தில் எமக்கு உள்ள மக்களின் ஆதரவுகளையும் சிதைக்கும் நோக்குடனேயே இந்த செயற்பாடு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் போலியான அமைப்புகள் ஊடாக எமக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதற்கு தயாராகி வருகின்ற இக் கட்சிகள் தேர்தல் பிரச்சார கடைசி நாளிலே எமக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதன் மூலம் அதை மறுதலிப்பதற்கான காலஅவகாசத்தை உருவாக்க விடாது கையாலுகின்ற ஒரு செயற்பாடே இது வாகும்.

மேலும் இந்த தேர்தலில் எம்முடன் நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் முகம் கொடுக்க முடியாத நிலையிலே இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். எனவே ஊடகமாகிய நீங்கள் நடுநிலைமையை பேணி ஊடக தர்மத்தை நிலை நிறுத்த வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் எமது வெற்றி தற்பொழுது உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே அதனை மறைப்பதற்கு இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினர், கருணா குழுவினரால் எமது கட்சி உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்ட வருகின்ற நிலைமை அங்கு தொடர்ச்சியாக காணப்படுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது சிதைவடைந்து இருக்கின்ற நிலையில் எமது கட்சியானது வலுப்பெற்று வருகின்ற பொழுது அதனை சிதைப்பதற்கு கிழக்கு மாகாணத்திலே அரச ஒட்டுக்குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.