அரசிடம் மண்டியிடுகிறதா அல்லது அரசியல் இருப்புக்காக பிச்சை எடுப்பா தமிழ் தேசியக் கூட்டமைப்பு.நிச்சயம் தமிழ் மக்களுக்காக அல்ல.தமது இருப்பை தக்க வைப்பதற்கும் வரப்போகும் பாராளுமன்றத்தின் கதிரைகளை கைப்பற்றுவதற்கு…
நிச்சயமாக கூறுகிறேன் இப்போது இருக்கும் இந்த பொது ஜன பெரமுன அரசு இன்னும் பதினைந்து ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத ஒரு அரசாக இருக்கும்…
வரும் தேர்தலில் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.காரணம் எதிர்க்கட்சி பலம் இழந்ததை விட துண்டு துண்டாக உடைக்கப்பட்டது இனியும் உடைக்கப்பட போகின்றது.ஆகவே இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காயை நகர்த்த முற்படுகிறது..
மூழ்கிக் கொண்டிருக்கும் வள்ளத்தில் சவாரி செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.எதிர்க்கட்சியை கூறினேன்.
பானையில் சோறு இருக்கும்போது அதை அல்ல தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இப்பொழுது அகப்பை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வரலாறு.22 உறுப்பினர் ,16 உறுப்பினர், இந்த தடவை 8 உறுப்பினர் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை..
மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது அதை கடந்த பிரதேசசபை மாகாணசபைத் தேர்தலிலும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.முக்கியமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களின் வாக்குகளை செல்லாத வாக்குகளாக மாற்றிய வரலாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும்…
ஆனால் இந்தத் தடவை மக்களும் சரி வாக்காளப் பெருமக்களும் சரி அரசியலை அரசியல் தலைமைகளை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் தமிழ் அரசியலில்.
சுண்டி விடப்படும் நாணயம் பூவா தலையா எது வேண்டுமென்றாலும் இருக்கலாம் இப்படி இருக்கிறது தமிழரின் அரசியல். உறுதியான அரசியல் தலைமைகள் இல்லாததன் வெளிப்பாடு.
கொலைகாரன் என்று சொன்ன இவர்களின் வாயால் இன்று மக்களின் தலைவன் என்று சொல்லப்போகிறார்கள் சிங்கள தலைவர்களை.எமது தமிழ் அரசியல் தலைமைகள் அடிக்கடி வாயை (வார்த்தைகளை) கழுவிக் கொள்வார்கள் அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று.என்ன கொடுமை மீண்டும் புதிய புராணங்கள் புதிய புகழ்ச்சி வார்த்தைகள் அள்ளி வீசப்பட போகின்றன.உங்கள் காதுகளை கழுவி வைத்துக்கொள்ளுங்கள் இதுவரை தேசியக் கூட்டமைப்பின் பின்னே சென்ற மக்களும் சரி தொண்டர்களும் சரி….
திருத்தவே முடியாத வாகனத்தில் பயணிப்பதை விட.பழுதடைந்த வாகனத்தை திருத்தி பயணிக்கலாம்.ஆனால் என்னைப் பொருத்தவரை இது இரண்டையும் நிராகரித்து(புதிதாக)நடந்து சென்று இலக்கை அடையலாம்…
எனது கருத்து சரியென்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்..
அன்புடன்
அரசியல் சாணக்கியன்..