பிரபாகரன் கொலையாளி, பிரபாகரன் வன்முறையாளன், பிரபாகரன் போராளியை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றெல்லாம் அலப்பறைகள் எழுந்தமானமாகப் பரவுகின்றன. தமிழகத்தின் சிலதரப்புகளும், அவர்களோடு கைகோர்த்த இலங்கைத்திருநாட்டின் முத்துமணிகளும் இட்டுக்கட்டப்பட்ட இவ்வாறான தகவலை, வலைத்தளங்களில் ஆசைஆசையாக் காவிக்கொண்டு ஓடித்திரிகிறார்கள்.
நந்திக்கடலிலில் நடந்த இறுதிப்போர் பற்றி எழுதிய கமால்குணரட்ண ; ” தனது கட்டளைக்காகச் சண்டையிடவென்று, மனவுறுதி தளராத போராளிகளை எவ்வாறு பிரபாகரன் உருவாக்கியிருப்பார்..” என்று அடிக்கடி சிந்தித்து வியந்ததுண்டு என்று குறிப்பிடுகிறார். சரி, அது கிடக்கட்டும்.
துறவு என்பது வெறுமனே குடும்பத்தை விட்டு தனித்து அலைவதோ அன்றி பிச்சையெடுத்துக்கொண்டு கோவில் கோவிலாகச் சுற்றுவதோ அல்ல. துறவு என்பது என்பதும் ஓர்வகை அறமே. பிறருக்காக தன்னை அர்ப்பணிப்பதும் துறவு நிலையே. புத்தரும் இயேசுவும் செய்தது துறவறம். துறவியாக விரும்புகின்ற சாதாரணமனிதன்; தன் இளம்பருவம், குடும்பப்பருவம் இரண்டையும் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்திருக்க வேண்டுமென்கிறார் கன்பூசியஸ். அவ்வாறே தமிழினத்தில் பிறந்து, தன்னை முழுமையாகத் தமிழினத்திற்கே அர்ப்பணித்தவர் பிரபாகரன். அவர் பூண்டதும் துறவறமே. அவரிடம் அறமின்றிய செயல்களை ஒரு போதும் காணமுடியாது.
ஆனையிறவை அழிப்பதற்கான முதல் எத்தனிப்பான 1991 ஆ.க.வெ சமரின் ஒரு கட்டத்தில், ஆனையிறவை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற கட்டைக்காடு பகுதியில் தரையிறங்கிய இராணுவம் வெற்றிலைக்கேணி நோக்கி முன்னேறி ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள, சண்டை இறுகிப்போன வேளையில்; வேவுப்புலிகளால் தலைவரிடம் ஓர் கோரிக்கை விடப்பட்டது. நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க ஒரே வழி, இராணுவம் உபயோகிக்குக் குடிநீர்த்தாங்கி மற்றும் கிணறுகளில் நஞ்சைக் கலந்துவிடலாம் என்பதுவே அந்தக்கோரிக்கை.
656 போராளிகளை இழந்து, சண்டை கைவிடப்படவேண்டிய நிலையிலும் தலைவர் அவ்வழியை அனுமதிக்கவில்லை. “உதைவிட நீங்கள் சண்டையைக் கைவிட்டுட்டுத் திரும்பலாம்” என்பதுவே அவரது பதிலாக இருந்ததாம்.
முல்லைத்தீவு, பலாலி, பூநகரி, வவுனியா, அநுராதபுரம் போன்ற பாரிய இராணுவத்தளங்களில் பகலிரவாகத் திரிந்து, இராணுவத்துடனேயே உணவருந்தி, அந்த முகாமிற்குள்ளேயே மாதக்கணக்கில் கிடந்து வேவுத்தகவல் சேகரித்துவரும் வேவுப்புலிகள் அங்கிருக்கும் உணவிலோ அன்றிக் குடிநீரிலோ நஞ்சைக் கலந்துவிட எவ்வளவு நேரம் ஆகும்..?!
எவ்வளவு வேவு, திட்டங்கள், அர்ப்பணிப்புகள், தியாகங்கள் எல்லாவற்றையும் அப்படியே ஓரம் கட்டிவைத்துவிட்டு, ஓர் நஞ்சுப்போத்தலோடு ஒவ்வொரு இராணுவமுகாமிற்குள்ளும் வேவுப்புலிகளை அனுப்பியிருந்தால்………….
தமிழீழத்தை 1990 இலேயே நாம் அடைந்திருக்கலாம்.
அடுத்தவன்ர சொத்தில வாழுறவன், சோற்றுக்கு வழியில்லாமல் ஒண்டிப்பிழைக்கிறவன், எங்கயோ இருந்து வந்தவனை தமிழினத்தலைவன் என்பவன், குடும்பவழி அரசியல் நடாத்தித்திரிபவன், இந்திய இராணுவத்தோட சேர்ந்து எங்கட பெண்பிள்ளைகளைக் கற்பழிச்சவன், வரலாற்றைத் திரித்துக் கதை எழுதுறவன், எல்லாருமே வேண்டுமென்றால் பக்கம்பக்கமாகப் பொய்க்கதை எழுதிப் பெயர் வாங்க முயற்சிக்கலாம்…….
ஆனால் எவனாலும் ஒருபோதும் #பிரபாகரனாக முடியாதப்பு…!
-தேவன்