பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பணி

609

பேராசிரியர் சு, வித்தியானந்தன் அவர்களின் பிறந்த நாள் இன்று

08.05.1924 இல் பேராசிரியர் வித்தியானந்தன் பிறந்தார். அவர் உயிரோடு இருந்திருப்பின் இன்று அவர் 96 வயது முதியவராயிருந்திருப்பார், அவரிடம் 1950 களின் நடுப்பகுதியிலிருந்து கற்ற மாணவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் மிகப் பிரபல்யமான ஒரு விரிவுரையாளராக அவர் அன்று இருந்தார்.

சிங்கள விரிவுரையாளர்கள் மத்தியிலும் அவர் மதிப்பிற்குரியவராக இருந்தார்.

அவரது பி எச் டி பட்ட ஆய்வு சங்க இலக்கியத்திலாகும்.

தமிழர் சால்பு என்ற பெயரில் அது தமிழில் நூல் வடிவிலும் வந்துள்ளது.

சங்க இலக்கியம் பற்றி ஆய்வோரின் மூலக் கையேடாக அது இன்று வரை உள்ளமை அதன் சிறப்பியல்பாகும்.

செந்நெறித் தமிழ் இலக்கியத்திலிருந்த ஈடுபாடு அதே அளவு அவருக்கு தமிழ் நாட்டார் இலக்கியத்திலுமிருந்த து.

ஈழத்து நாட்டுபாடல்களையும் கூத்துகள் சிலவற்றையும் பதிப்பித்து அதன் மீது கற்றோர் கவனத்தைத் திசை திருப்பினார்

செந்நெறி போக்கையும் செந்நெறி சாராத போக்கையும் தமிழர் பண்பாடு எனும் ஒரு நாண்யத்தின் இரண்டு பக்கங்கள் என அவர் கருதினார்

செயற்பட்டார்

1960 களிலிருந்து அவர் தமது பெரிய உடம்பையும் தூக்கிகொண்டு ஓடி ஒடி ஈழத்தில் தமிழர்,முஸ்லிம்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் அடிக்கடி பிரயாணம் செய்து தமிழ்ப் பணியும் கலைப்பணியும் புரிந்தார்.

அவரது மிகபிரதான பணிகளில் ஒன்று நாட்டார் இயலுக்கும் கூத்து வளர்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பாகும்.

தமிழரின் உயர் கலைகளாக சில கலைகள் கோலோச்சிய வேளை அதன் மறு பக்கமான நாட்டார் கலைகளையும் கூத்துகளையும் நாட்டார் பாடல்களையும் முதன்மைப்படுத்தினார் பேராசிரியர் சு.வித்தியானந்தன்

தான் மட்டும் இயங்காது இதில் இயங்க அவர் ஒரு பரம்பரையையே உருவாக்கினார்

தமிழ்நாட்டுப்பல்கலைக் கழகங்களில் நாட்டாரியலும் கூத்தும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படிருந்த காலத்தில் அவற்றின் மீது ஆய்வாளரினதும் பொது மக்களினதும் கவனக்குவிப்பைத் திருப்பியவர் அவர்

அச்சிந்தனையை அவர் தனது குருநாதரான பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் இருந்து கற்றுக்கொண்டார்

அவர் இட்ட விதை இன்று ஆலமரம் போல பரந்து விரிந்து பரவியுள்ளது

நாடகமும் அரங்கியலும் எனும் பாட நெறி பல்கலைக்ழகத்தில் ஒரு பாட நெறியாக அத்திவாரமிட்டவர் அவர்.

அவர் காலத்திலேயே அந்நெறி #யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவர் ஓர் மிகச்சிறந்த ஆசிரியர்.

அவரது வகுப்புகள் எப்போதும் சுவைதரும்.

இலக்கணத்தை எந்தவித அலுப்பும் ஏற்படுத்தாமல் மாணவர்களுக்கு அவர் சுவராஸ்யமாக் கற்பிக்கும் பாணி அலாதியானது.

60 வயது தாண்டி உபவேந்தராயிருந்த காலத்திலும் அவர் கற்பித்தலைக் கைவிடவில்லை.

60 வயது தாண்டிய நமது இன்றைய பேராசிரியர்களுக்கு இது ஒரு பாடம்.

அவர் ஈழத்தமிழ் இலக்கியம் மீது அதிகம் கவனம் செலுத்தினார்

பிறையன்பன் எனும் பெயரில் இஸ்லாமிய இலக்கியம் பண்பாடு பற்றிக்கட்டுரைகள் வரைந்தார்

ஓர் பிரதேசத்தையும் உயர் மட் ட த்தையும் குவி மையப்படுத்தியிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியம் கலைகள் பற்றிய சிந்தனைகளையும் போக்குகளையும் இலங்கையின்
மன்னார்
மட்டக்களப்பு
வன்னி
சிலாபம்
மலைநாடு

என பல பிரதேசங்களையும்

தமிழ் பேசும் இனமான இஸ்லாமியரையும் உள்ளடக்கிச் சிந்திக்க வைத்தவருள் முக்கியமானவர் வித்தியானந்தன்

அவரை 1958 ஆ ம் ஆண்டில் முதல் நாள் சந்தித்த எனது பாடசாலை நாளும்

அவரால் 1961 ஆம் ஆண்டு தொடக்கம் 1965 வரை செதுக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக நாட்களும்

அவரால் வழிநடத்தப்பட்ட 1965க்குப் பிந்திய நாட்களும்

அவர் உப வேந்தராயிருந்தபோது அவரது தலைமையின் கீழ் 1980 களுக்குப்பின் பணி புரிந்த யாழ்ப்பாணப் பலகலைக் கழக நாட்களும்

நாடகம், கூத்து காணவும்.

கூத்துக் கலைஞர்களைக் காணவும்

கூத்து நூல்களைத் தேடியும்

இலங்கையின் தமிழர் வாழும் சின்னம்சிறிய அக் குக்கிராமங்களுக்கு எல்லாம் அலைந்து சென்ற அந்த நாட்களும் ஞாபகம் வருகின்றன

என் வாழ்வில் மாத்திரமல்ல

அவரைச் சந்தித்த அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பெரும் மனிதர் பேராசிரியர் வித்தியானன்தன்

அவரை மிகுந்த மரியாதையோடு நினைவு கூர்வோம்

Maunaguru Sinniah