ஆந்திர மாநிலம் ,விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு ( Styrene or ethenylbenzene gas) கசிவால் சுமார் 5,000 பேர் பாதிப்பு

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்

சாலையில் சென்ற பலர் விஷவாயு பாதிப்பால் மயங்கி விழுந்ததால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.3 கி.மீ தொலைவுக்கு விஷவாயு கசிவால் 5,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்.விஷவாயுவை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான மக்கள் சாலைகளில் மயங்கினர். 200 பேர் கவலைக்கிடம்

இயற்கைக்கு எதிரான,சமூகத்துக்கு ஒவ்வாத,தனியார் கம்பனிகளின் பணபேராசைக்கும்,அரசு வரி வருமானத்துக்கும் ஆசைப்பட்டு இவ்வாறான செயற்கையான முறையற்ற விதங்களில் தொழிற்படும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது.உங்கள் உங்கள் ஊர்களில் இவ்வாறான தொழிற்சாலை,திட்டங்கள் வரும் போது,அவற்றை இன்றே எதிர்த்து ஒன்றுபடுங்கள் மக்களே!!! விஞ்ஞானிக்கள்,படித்தவர்கள் என்று மீடியா கூறும் கதைகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் இவ்வாறான சம்பங்களை தவிர்க்கலாம்,இல்லாமல் நாம் இவற்றை தவிர்த்து கடக்கும் போது,நமக்கும் இதே போன்ற ஒரு சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பை நாமே உருவாக்கி கொடுக்கின்றோம்.உதாரணமாக கூடன்குளம் அணுமின் ஆலை