யாழில் கல்வி நிறுவனம் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல்;

68

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூறிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்பு கமெராக்களை அடித்துடைத்துள்ளனர்.

இதன் பின்னர் அங்கிருந்த பணியாளர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சிறிய ஒரு இனத்துக்குள்ளயே இவ்வளவு வெட்டுகுத்துக்கள் ஒயாமல் நடந்து கொண்டிருக்க,எப்படி இந்த இனம் முன்னே செல்லும்? இந்த இனத்துக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்கின்றதா? இல்லை குத்துமதிப்பாக ஒரு பாதையில் பயணம் செய்கின்றதா? இவர்களை சிங்களவர்களிடமிருந்து காப்பாற்றவா இத்தனை உயிர்களை கொடுத்தோம் என்ற அளவுக்கு வந்து நிற்கின்றது.