கோவிட் 19 – இங்கிலாந்தில் நூறை தாண்டிய பலி..2500 பேருக்கு நோய் தொற்று

72

இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வரும் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 104 பேர் இறந்துள்ளனர்.இதுவரை சோதனை செய்யப்பட்ட 56,221 மக்களில் 53,595 பேர் நெகட்டீவ் ,2,626 பொஸிட்டிவ் தாக்கத்தை கொண்டுள்ளனர்.

மக்களை பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்து வீட்டில் தங்கியிருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும்,நோய் தொற்று தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளது.இதே வேளை கடைகளில் பொருட்களுக்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன்,மக்கள் முண்டியடித்து எல்லா ற்றையும் வாங்கி கொண்டு வீடு செல்வதுடன்,கோவிட் சோதனை என்ற போர்வையில் சமூக குற்ற செயல்களும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.