கொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்

68

உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என அறிவதற்கான பரிசோதனை எனும் பெயரில் , வீடுகளின் கதவுகளை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தட்டுவதாக இலண்டன் மெற்றோ பொலிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

இவர்களுக்காக வீட்டுக் கதவுகளை திறக்க வேண்டாம் எனவும் , வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக 999 அல்லது 101 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்கவும் கோருகிறார்கள்.

#Be_Safe