பிரிட்டன் அரசு சுகாதார சேவையான NHS, தமிழர்கள் இல்லையென்றால் சிறப்பாக நடந்திருக்க சாத்தியமில்லை என்று பிரிட்டனின் சுகாதார முதன்மை செயலாளர் மேட் ஹேன்காக் கடந்த 2018-ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அந்த துறைக்கு உதவியாக பல்வேறு தளங்களில் பணி புரிந்து வரும் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்பதை அங்குள்ள அரசாங்கம் மறுக்கமுடியாது என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
பிரிட்டன் சுகாதார செயலாளர் முன்பு சொன்ன கருத்துக்களை மெய்ப்பிக்கும் வகையில், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள், கடை பராமரிப்பாளர்கள், பெட்ரோல் நிலைய உதவியாளர்கள், துப்புரவாளர்கள், துரித உணவுப் பணியாளர்கள்… இப்படி பல்வேறு தளங்களில் தங்கள் பங்களிப்புகளை வழங்கிவருவதாகவும், அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகவும் திகழ்கிறது என்றும் பிரிட்டனின் பணிபுரிந்துவரும் தமிழ் மருத்துவர் திரு. துஷியன் நந்தகுமார் செய்தி பகிர்ந்துள்ளார்.

நிலம் மாறினாலும்,
கடல் கடந்தாலும்,
தமிழர்களின் மனிதநேயம் எந்தநிலையிலும் மாறாதது… ❤️