
எல் நினோ,லா நினோ புயல்களை எதிர்கொண்ட உலகின் தலைசிறந்த கடலோடிகள்.
1999 இல் ஆர்கோ பெருங்கடல் கண்காணிப்பு முறைமை (ARGO Ocean Observing System) ஊடாக ஒரு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
அதாவது பெரும்புயல் ஒன்று உருவாகப்போவதாகவும் அது வங்கக்கடலில் கடற்கொந்தழிப்பை ஏற்படுத்தப்போவதாகவும் இதனால்
கரையோரப்பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உட்படும் எனவும் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்த எச்சரிக்கை அறிவுறுத்தியிருந்தது.

எல்-நினோ,லா-நினோ
என்பதான பருவ மாற்றத்தையும் புயலையும் ஏற்படுத்தும் ஒரு காலநிலையாக அது அறிவிக்கப்பட்டிருந்தது.
கடலின் மேற்பகுதியில் 200 அடி வரையிலான நீரின் வெப்பத்தை விஞ்ஞானிகள் கவனிக்கின்றனர். அதில் மாற்றம் ஏற்பட்டு, பருவ காற்றும் புயலும் வந்தால் எல் நினோ, லா நினோ என்கின்றனர்.
இந்த எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து
கடலில் ஏற்படப்போகும் புயலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள
சிறிலங்காவின் கடற்படைக்கலங்கள் அனைத்தும் துறைமுகங்களுக்குள் பதுங்கிக்கொண்டன.
இதனைச் சாதகமாக மாற்றிய கடற்புலிகள் ஆழக்கடல் வினியோக நடவடிக்கைகளை தொடங்கினர். இடியென்ன புயலென்ன இனத்துக்காய் விரைந்தனர் வேகப்படகேறி.
ஆனையிறவு பெருந்தள அழிப்பிற்கான ஆயுத தளபாடங்களை எல்-நினோ,லா-நினோ வுக்கு முகம் கொடுத்தபடி கரைசேர்த்தனர்.
ஒருநாள் இருநாள் அல்ல ஒரு மாதத்திற்கும் மேலாக கடற்கொந்தழிப்புகளுக்கு மத்தியில்
அலைகளில் ஏறி விழுந்தபடி தொடர்ந்தது கடற்பயணம்.
படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் வெளியிணைப்பு இயந்திரங்களில் கடற்சீற்றத்தால் கோளாறுகள் ஏற்படும்.நடுக்கடலில் வைத்தே அதனை திருத்தியெடுத்தபடி விரையும் படகுகள். சிலவேளைகளில் பூட்டப்பட்டிருக்கும் தொடர்பு சாதனங்களின் அன்ரனாக்கள்கூட அறுந்து தொங்கும் நிலையில் கரைக்கும் படகிற்குமான தொடர்புகளற்ற போதும் திசைமாறாது கரைசேர்க்க அலையுடன் போராடி கரைசேர்ப்பர் உலகின் தலைசிறந்த கடலோடிகள்.
படகுகளின் எரிபொருள் தாங்கிகளில் வெடிப்பேற்பட்டு எரிபொருட்கள் தீர்ந்த நிலையில் எங்கோ தொலைவில் அலைகளால் இழுத்துச்செல்லப்படும் படகினைத் தேடிச்சென்று கட்டியிழுத்து கரைகொண்டுவரும் தோழமைப் படகுகள்.
இவ்வாறாக
எல் நினோவை லா நினோவை எதிர்கொண்டதில் அந்தப் புயல்கள்
விழுங்கிக்கொண்ட படகுகளோடு கடற்தாய் அரவணைத்துக்கொண்ட கடற்புலிகளின் ஆழக் கடலோடிகள்
என்றும் எம்மினத்தை கரைசேர்த்த படகோட்டிகளாய் நிலைபெறுவர்.
புலவர் கடற்புலிகள்