Uncertainty நிலையில்லா கோட்பாடு – Prabaroose

215

இந்த பரந்த உலகத்தில் புழு,பூச்சியில் ஆரம்பிச்சு..பரிணாமத்தின் உச்சம் ன்னு நினைக்கும் மனித குலம் வரைக்கும் எல்லாமே தொடர்ந்து இயங்கிட்டு தான் இருக்கு…இப்படி கட்டுபாடில்லாம இயங்கும் இயக்கமானது சீராக இருப்பதில்லை..நிலையற்ற தன்மையிலே அமைகிறது…இந்த நிலையற்ற தன்மை அனைத்தின் அடிப்படை கூறான அணுக்கரு வின் எலக்ட்ரான் இல் துவங்கி…இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் வரையறுக்கிறது…நிலையற்ற அல்லது ஒழுங்கற்ற எலக்ட்ரான் இயக்கம்…ஒரு உலோக அல்லது ஏனைய தளத்தில் எலக்ட்ரான் இயக்கமானது ஒழுங்கில்லாமல் இஷ்டம் போல நகர்ந்து கொண்டே இருக்கும்…கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்…இவ்வாறு சீரற்று பயணித்து கொண்டிருக்கும் ஒரு துகளின் நிலை(position) அல்லது உந்தம் ( பயணிக்கும் திசை) ஆகியவற்றை ஒரே நேரத்தில் கணிக்க முடியாது – இது தான் Heisenberg ன் நிலையில்லா கோட்பாடு…இந்த சீரற்ற இயக்கத்தின் விளைவு தான் நிலையில்லாமல் இந்த துகள்கள் இயங்குவது…இதற்கும் duality கும் நெருங்கிய தொடர்பு இருக்கு…துகளாக பயணிக்கும் ஒரு matter அலை தன்மையும் கொண்டிருக்கும்..இந்த துகளுக்கும் அலைக்கும் இடையேயான நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த இயக்கம் நோக்கம் போல குண்டக்க மண்டக்க இயங்கிட்டு இருக்கு…இதை அப்படியே மனிதனுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பொறுத்தி பாப்போம்..
(அலை-மனம் : துகள்-உடல் ) இந்த ரெண்டு duality குள்ளேயும் மாட்டிக்கிட்டு நம்ம ஆன்மா படும் பாடு தான் இந்த இயக்கமே…துகளானது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வேலை செய்யும்…ஆனால் அலை இயக்கம் எப்போதும் ஒற்றை செயல் முறையை கொண்டே தான் இருக்கும்…அலை வடிவில் இருக்கும் ஆன்மாக்கள் பிடிவாதம் கொண்டதாக இருப்பதன் காரணமும் இது தான் – சில விஷயங்களை தராவிட்டால் மன்னிக்கவே மன்னிக்காது..கிடா பலி கேட்பது – நேத்திகடன் செய்வது போன்றவற்றை கண்டிப்புடன் கேட்டு பெறுவது போன்றவை இதற்கு சான்றாக கொள்ளலாம்…இதே துகளாக இருக்கும் மனிதர்கள் அப்படி இல்லை ஏன்னா நாம மூளையினுடன் தொடர்புல இருக்கோம்…மூளை புலனுறுப்புகளுடன் தொடர்புல இருக்கு…எனவே  இதன் இயக்கம் வேற மாதிரி இருக்கும்…இதற்கு உதாரணமா ஒருத்தன் என்னதான் சிறுநீரை அடக்க மனதளவில் முயற்சித்தாலும் அவனது உடல் ஒத்துழைக்காது… காரணம் மூளை உடலின் துகள் நிலையை தக்கவைத்து கொள்ள முயற்சி பண்ணும்….இந்த மனதுக்கும் உடலுக்கும் இடையேயான சண்டை தான் இந்த சீரற்ற இயக்கம்….main road பக்கம் போய் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க எவ்வளவு வாகனங்கள்,எவ்வளவு மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வேகமாக இயங்கிட்டு இருக்காங்க…ஒரு சீர் இல்லாமல் போய்கிட்டே இருப்பாங்க..
இந்த நிலையற்ற தன்மையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்க…நேத்து இரவு வரைக்கும் நல்லா பேசுனவன் இன்னிக்கு காலைல பேச மாட்டான்… ஒருவருசம் முன்னாடி நாம யார்கூட நெருக்கமா இருந்தோம் இப்போ யார்கூட நெருக்கமா இருக்கோம்…ஒரு நேரம் சிரிச்சு அன்பா பேசுறாங்க ஒரு நேரம் அவங்களே நம்மல கோவப்படுத்துறங்க…நேத்து பிடிக்கல ன்னு விலகி போனவங்க இன்னிக்கு நெருங்கி வந்து பேசுறாங்க..நேத்து வரைக்கும் கஞ்சிக்கே வழியில்லாம இருந்தவன் இன்னிக்கு கோடீசுவரன்,லட்சாதிபதியா இருந்தவன் இன்னிக்கு தினக்கூலி வேலைக்கு போறான்அப்பப்பா என்ன ஒரு நிலையில்லா உலகு…
இந்த உலகம் துவங்கியது தொட்டே இந்த இயக்கம் இப்படி தான் இருக்கும்..இது துகளிற்கும் அலையிற்கும் இடையே நடக்கும் யுத்தம் இதுல சிக்கிக்கிட்டு ஏன் ஒடுறோம் எதுக்கு ஓடுறோம் எதுக்கும் சம்பாதிக்குறோம் என்ன செய்யுறோம் ன்னு அலஞ்சு திரியும்போதே வாழ்க்கை முடிஞ்சிரும்…
இந்த சீரற்ற நிலையை கணிப்பது கடினம் ஏன் சாத்தியாமே இல்லாமலும் போகலாம்…இது இப்படி இருப்பதால் தான் இந்த நிலையற்ற கோட்பாடு உறுதியற்றதாகவும் இருக்கு…இது தான் நிகழ்தகவியல் இத இன்னொரு நாள் பதிவிடுறேன்..
இதை சீர்தூக்கி பார்த்த சிலர் தான் இன்னிக்கு தத்துவ ஞானிகளா இருக்காங்க.. துகளையும் அடக்கி அலையையும் அடக்கி அந்த duality என்னும் நிலையை உடைச்சி சித்தம் தெளிஞ்சவங்க…
இருக்கு ஆனா இல்ல – இதுவும் இதன் அடிப்படையில தான் இயங்குது எல்லாமே நிகழ்தகவின் அடிப்படை கோட்பாடு தான்..50/50 நடைமுறை தான் இங்க நிலைபாட்டியலே..இதை இன்னமும் தெளிவா சொல்ல தெரியல…
Uncertain relativityசூழ்நிலைகளும்,உணர்ச்சி/உணர்வுகளும் தான் ஏதேனும் ஒரு நிலையை தேர்வு செய்யும் முயற்சியில் இந்த நிலையற்ற இயக்கத்தை நகர்த்துகிறது..உடல் ஒரு மூளையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் ஆம்,இல்லை என்ற இரண்டில் ஒரு நிலைப்பாட்டை கண்டிப்பாக தேர்வு செய்தே ஆகணும்…அதனால் தான் உண்மை எது பொய் எது ன்னே தெரியாம பல இடங்களில் குழப்பம் மட்டும் மிஞ்சுகிறது…என்ன செய்யுறோமோ தெரியாது ஆனா எதையாவது செஞ்சு நம்மல நாமே திருப்தி படுத்திக்கணும்..நல்லதோ கெட்டதோஅதுமட்டுமன்றி இந்த duality இல் ஏதேனும் ஒன்றை ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்வு செஞ்சே ஆகணும்…கோவிலில் வரிசையில் நிக்கும்போது, ஒன்னு முன்னாடி நகரனும் இல்ல ன்னா வழிய விட்டு பின்னாடி போய்டனும் அத விட்டு நடுவுல நின்னா கண்டிப்பா எவனாச்சும் திட்டுவான்…ஏன்னா அவன் நகரனும் அவனால் யோசிக்க முடியாது..காரணம் அவன் அடுத்தகட்ட நகர்வுக்கு தள்ளப்படுறான் அது தான் நிலையற்ற சார்பு – சரியோ தப்போ ஏதோ ஒன்ன பண்ணியே ஆகணும் இல்ல ன்னா இங்க survive பண்ண முடியாது…
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க..எவ்வளவு பெரிய உலகம் எத்தனை நாடுகள்,மதங்கள்,அரசியலமைப்பு,பணம்,பொருளாதாரம், போர்,புரட்சி – எல்லாம் எதுக்கு…சம்பந்தமே நிலை  இல்லாத நகர்வுக்காக மட்டுமே..அதுவும் ஒழுங்கற்ற இயக்கம்…
நிலையில்லா இந்த உலகத்துல நிலைகொள்ள முடியாது ன்னு தெரிஞ்சும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நினைக்கும் மக்கள் ; பாவம்,அவங்களுக்கு தெரியாது அதுவும் நிலையில்லாமல் தான் போகும் ன்னு – காரணம் நிலையில்லாமல் இயங்கும் இந்த நிலையில்லா கோட்பாட்டின் நிலைப்பாடு தான்,நாளைக்கு இதுவும் நிலையில்லாமல் போகும்..