பிரபஞ்ச மதம்…

74

இந்த உலகத்தில பிறந்த ,பிறக்கிற, பிறக்கபோற அத்தனை மக்களும் அவர்கள் பிறப்பால் எந்த இனம்,மத அடையாளங்களை கொண்டிருந்தாலும்,அவர்களின் மன இயல்புக்கு ஏற்ற வகையிலேயே வாழ்ந்து இறக்கின்றனர்.

பிறந்து முதல் 0-12 வயது வரை உலகில் பிறக்கும் அநேகமான மனிதர்கள்,சாதாரண அன்பு கோட்பாடுகளை வைத்து நெகிழ்ச்சியான பாவமன்னிப்புக்களை வாங்ககூடிய கிறித்தவராகவே வாழ்கின்றனர்.அந்த வயசு இயல்புக்கு அந்த மதம் பொருத்தமாக இருக்கின்றது.அவர்கள் எந்த தனித்த மதமாக அடையாளப்பட்டிருந்தாலும்,அவர்களின் அநம வயது மன இயல்புக்கு கிறிஸ்தவ மத இயப்புகள் பொருத்தமா இருக்கின்றது.

12-40 வயது வரை இஸ்லாமியாராகவே இருப்பார்கள்,உலகம் தழுவி இந்த வயதில் உள்ள மனிதர்களின் இயல்புக்கு அந்த கோட்பாடுகள் பொருத்தமாக இருக்கும்.தவிர இஸ்லாமிய கோட்பாடுகளை தாண்டி அவற்றை கடைப்பிடிக்கும் இறுக்கமான நடைமுறை மன இயல்பு இந்த வயதில்அதிகமாகவே இவர்களுக்கு இருக்கும்.

40-60 வயது வரை இந்துவாகவும் எல்லாவற்றையும் ஏற்கும்,பரந்த கோட்பாடுகளை கொண்ட மத மன இயல்புகளை இந்த வயது மனிதர்கள் உலகம் முழுவதுமாக இருப்பார்கள்.அவர்கள் நடைமுறை வாழ்க்கை சார்ந்து இந்த மனநிலைதான் அவர்களிடம் இருக்கும்.

60 – வயதுக்கு பின்னர் புத்தர்களாகும் நோக்கிலானா பெளத்த மத மன இயல்புகள் வந்துவிடும்.அதாவது உலக வாழ்வு இன்பங்களை துறந்து இறப்புக்கு தயாராகும் ஒரு மனநிலைக்கு இந்த வயது மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்க்கையை சரியாக கவனித்தால் உலகம் தாண்டிய இந்த பேருண்மையை உங்களுக்குள் கண்டுகொள்ளலாம்… இயேசுவால் கிறிஸ்தவராக பிறக்க முடியவில்லை,யூதராக பிறந்தார்,நபியால் முஸ்லீமாக பிறக்க முடியவில்லை..இங்கு எல்லாமே ஒன்றோடொன்று இணைந்தே இருக்கின்றது அந்த இணைப்புக்களை நாம் எமக்கு உள்ளயும் வெளியிலும் கண்டுகொள்ளும் போது வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

கிறிஸ்தவம்,இந்து,இஸ்லாம்,பெளத்தம் இங்கு எதுவும் தனிதனியாக இல்லை,எல்லாம் ஒன்றொடொன்று கலந்து சேர்ந்துதான் உள்ளது.தனிதனியாக இருப்பது முழுக்க அரசியல்,வணிகம் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக/அதற்கு பயன்படுத்தபடுவதாக மட்டுமே இருக்கும்.விழிப்புணர்வே மனிதகுல விடுதலைக்கான முதல்படி