உங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…

118

பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் உறவுகளே,இந்த (NHS Test and Trace) செயலியை இன்றே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.மற்றவர்களுக்கு உதவியாக இருக்க.நீங்களும் இதை தயவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே.

https://play.google.com/store/apps/details?id=uk.nhs.covid19.production

பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் உறவுகள்,அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து அரசாங்கத்தின்
உத்தியோகபூர்வ தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை தரவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு அருகில் இருப்பதைக் தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர் கண்டறிந்தால்,14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த தேசிய சுகாதார சேவை, அறிவுறுத்துகிறது.பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர் பார்வையிட்ட இடம் தொற்று பரவல் மையம் எனக் கண்டறியப்பட்டால் எச்சரிக்க ஒரு செக்-இன் ஸ்கேனரும் இதில் உள்ளது.
16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
தங்கள் ஸ்மார்ட்போனில்
பயன்பாட்டை நிறுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதுகுறித்து சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் கூறுகையில், ‘வைரஸ் அபாயத்தில் உள்ள அதிகமானவர்களைக் கண்டுபிடிக்க இந்த பயன்பாடு எங்களுக்கு உதவுகிறது.
பயன்பாட்டைப் தரவிறக்கும் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக்
கொள்ள உதவுவார்கள்.தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க உதவுவார்கள். தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க உதவுவார்கள்’ என கூறினார்.

News by eelamranjan