பாராளுமன்றத்தில் தூங்கும் அரசியல்வாதிகள்!

நாடாளுமன்றத்தில் அதிகமாக தூங்கும் நபர்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் அவையிலேயே இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர்களை அவதானித்தால், இதனை நன்றாக கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நித்திரை கொள்ளும் அரசியல்வாதிகள் வரிசையில் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்க,எஸ்.பி.திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன ஆகியோரின் புகைப்படங்களை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டுள்ளன.

அதேவேளை உலகில் உள்ள திருடர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலேயே இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.