சுதந்திரத்தின் பின் ஐதேக இல்லாத பாராளுமன்றம் நாளை!

147

பாராளுமன்றத் தேர்தலின் பின் புதிய பாராளுமன்றம் நாளைய தினம் 20ம் திகதி கூடவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2ம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றம் சுமார் 6 மாதங்களின் பின் மீண்டும் கூடவுள்ளது.

இம்முறை பாராளுமன்றின் விசேட அம்சமாக நாட்டில் பிரபல கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இன்றி பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1948ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் மாத்திரமே கிடைத்தது. அந்த தேசிய பட்டியலுக்கும் இதுவரை எவரும் பெயரிடப்படவில்லை.

அதேபோல எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கும் இன்னும் எவரும் பெயரிடப்படவில்லை. எனவே நாளைய தினம் கூடவுள்ள பாராளுமன்றில் 223 பேர் மாத்திரமே பங்குபற்றவுள்ளனர்.