உரிமையும்…சலுகையும்…

37

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

ஒரு சாரார் கூறுகின்றனர் உரிமைதான் முதலிடம் என்று….

இன்னொரு சாரார் கூறுகின்றனர் சலுகைதான் முதலிடம் என்று….

மற்றுமொரு சாரார் கூறுகின்றனர் இரண்டும் ஒரே நிலையில் செல்ல வேண்டும் என்று…..

இவ்வாறு தத்தமது மனநிலைக்கு ஏற்ற விதத்தில் செல்வது ஆரோக்கியமானதே….

அது அவர்களது அரசியல் புரிதல் அடிப்படையில் நடைபெறட்டும்…….

ஆனாலும் அதை யாருக்கு செய்ய போகின்றோம்……

யாரை எதிர்க்க வேண்டும் என்ற புரிதல் அற்ற நிலையில் எதிப்பதும் தவறு…..

யாரை ஆதரிக்க வேண்டும் என்ற புரிதல் அற்ற நிலையில் ஆதரிப்பதும் தவறு……

இங்கே ஆதரிப்பதனால் பலவீனம் அடைவது எந்தளவு தாக்கம் செலுத்துமோ…..

அந்தளவு எதிர்ப்பதாலும் பலவீனம் மட்டுமே எமது சமூகத்துக்கு மீதமாகும்……

இங்கே ஒரு சுதந்திர ஆளுமை கொண்ட அரசியல் பயணம் மிக மிக முக்கியமானது…..

எங்கள் தேவைகளை எடுத்துச்செல்லும் துணிவும்/ சந்தர்ப்பத்தையும் உருவாக்க வேண்டும்….

அதேவேளை எங்கள் உரித்தானவற்றை ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றவற்றை தெளிவுடன் செய்யும் ஆளுமையை உருவாக்க வேண்டும்…..

ஏனெனில் எமக்கான உரிமை என்பது ஓரிரு தினத்தில் முடிந்த போராட்டம் அல்ல….

சாதாரணமாக கடந்து செல்ல….

ஓராயிரம் தியாகங்கள் கொண்ட நீத்துப்போகாத கோரிக்கை அது….

அதை அசாதாரணமான அபிவிருத்தி என்ற ஒன்றினுள் அடக்கிட முடியாது….

எதை அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்போர் உணர வேண்டும்….

அவ்வாறே உரிமைகளை மட்டும் பேசிக்கொண்டு எமது மக்களை பலவீனமான சமூகமாகவே கடந்து செல்ல முடியாது….

ஏனெனில் எமது சமூகம் பலவீனமாக இருக்கும் வரை அதிகார வர்க்கங்கள், அதிகார இனத்தவர்கள் எங்கள் நிலங்களையும், வளங்களையும் சூரையாடி விடுவர்……

எனவே ஓரளவு சாதகமானதை சாத்தியப்படுத்திக்கொண்டு,,,,,,

சாதிக்க வேண்டிய சரித்திர பூர்வீக உரிமையை நோக்கிய பயணம் என்றும் தளராது முன்னெடுக்க வேண்டும்….

அதற்கான தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாது…..

அதற்கான கொள்கை ரீதியான கட்சியையும் பாதுகாப்பது அவசியம்…..

எமது உரிமைகளை……

எமது தேவைகளை காட்டி மளுங்கடிக்க பல வழியிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது….

எனவே எமது தமிழர் சார் அரசியல் களத்தில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்…..

எம்மினத்தை எம்மவர்களே எமனாக மாறிவிடக்கூடாது….

சிந்திப்போம்…

எம் நிலைப்பாட்டை எல்லோருக்கும் எடுத்துரைப்போம்…..

நன்றி KN Rasik