கொரானாவும் உலகின் ஒன்றிய அரசியலும்

264

உலகையே உலுக்கி வரும் #Covid -19 #வைரஸை சிறு நாடுகளான தென்கொரியயாவும், வியட்நாமும் வெற்றிகரமாக வீழ்த்தியிருக்கும் வேளையில்

ஒன்றிய அமைப்பில் உள்ள நாடுகளில் முன்னேறிய வளர்ந்த மாகாணங்களுக்கும் – ஒன்றிய அரசுக்கும் கருத்து மோதல் போக்குகள் முன் எப்போதும் இல்லாத ரீதியில் உருவாகி இருக்கின்றன

அமெரிக்காவின் மொத்த வரி வருவாயில் 15% தொகையை அளிப்பது கலிபோர்னியா மாகாணம்

இந்திய ஒன்றியத்தில் #கலிபோர்னியாவுக்கு Counterpart #தமிழகம் எனலாம்

ஒரு ஒன்றிய அமைப்பிற்கு உள்ள மேம்பட்ட சமூகம் மற்ற மாகாணங்களிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது அவ்வாறான மாகாணங்களிலிருந்து உருவாக கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கைகள் போன்றவற்றில் கலிபோர்னியாவும் தமிழகமும் ஒன்றே

கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் கலிபோர்னியாவை ஒரு #Nation-State என அறிவிக்கிறார் காரணம் #கோவிட்-19 தோற்று நோய் சமாளிப்பில் போதிய அளவு ஒன்றிய அரசு உதவவில்லை என்பது.

ஒன்றிய அரசு வழங்கத் தவறிய மருத்துவ பொருட்களைப் பெறுவதற்கு ஆளுநர் கவின் நியூசோம், கலிபோர்னியாவின் மொத்த கொள்முதல் சக்தியை ஒரு “Nation-state” ஆக பயன்படுத்துவோம் என்கிறார் உபரியை மற்ற மாகாணங்களுக்கு “Export” செய்யோம் என்கிறார் .

அப்படியென்றால் தனது மாநிலத்துக்கு தேவையாக உபகரணங்களை மத்திய அரசு தலையீடு இல்லாமல் வாங்குவதும், வெளி மாநிலங்களுக்கு விற்பதுமாகும்.

“Federalism has always had rough spots, but conflict is rising and resolutions are not.”- என தனது theory of nullification கூறுகிறார் கோட்பாட்டாளரும் அமெரிக்காவின் ஏழாவது துணை ஜனாதிபதியமான John.C.Calhoun

தமிழகத்தில் இந்த பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, இந்திய ஒன்றிய அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு இல்லாத பொருட்களுக்கான வரிவசூல் உரிமையை #ஜிஎஸ்டி மசோதா மூலம் மாநிலங்களிலிருந்து தனதாக்கிக் கொண்டது

மாநில அரசுகளின் #பொருளாதார இறையாண்மை மீதான மீறல் என்றாலும் மற்ற வட மாநிலங்களும், #கேரளா போன்ற சிறு மாநிலங்களும் தமிழகம் போன்ற மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசு பெறும் அதிக வரி வருவாய் தங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்பதால் ஆதரித்தனர் முடிவில் கடுமையாக எதிர்த்த தமிழகமும் ஆதரிக்கும் நிலை ஏற்ப்பட்டது

இவ்வாறு பொருட்களுக்கான வரிவசூல் உரிமையை இழந்த மாநிலங்களில் தங்களுக்கு ஒன்றிய அரசு #கொரோனா பாதிப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற தற்போது குரல் எழுந்துள்ளது

தமிழகத்திலோ தங்களது #வரிவசூல் உரிமையை தனதாக்கிக் கொண்டு வரிவசூல் செய்த தொகையில் திரும்ப தர வேண்டிய நிலுவை தொகையான 12 ஆயிரம் கோடி ரூபாயும் தராமல் குறைந்த ஒன்றிய நிவாரண நிதியுதவி

Covid-19 தொடர்பாக எந்த மாநிலங்களும் சுயமாக #மருத்துவ பொருட்கள் கொள்முதல் செய்ய கூடாது என்பன போன்ற #சுகாதாரத்துறை போன்ற பல துறைகளில் மேலும் மேலும் ஒன்றிய அரசு அதிகார குவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கையகப்படுத்தும் வேளைகளில் இந்த சூழலிலும் செயல்படுகிறது
ஒக்கி புயல், #கஜா புயல், சென்னை பெருவெள்ளம், குரங்கணி தீ விபத்து என‌ ஒன்றிய அரசின் அதிகார குவியலும், வரிவசூல் நடவடிக்கைகள் மாநிலங்களை கைவிட்டது இதுவே முதல் முறை அல்ல

இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் Own muscle power இல்லாத #ஒன்றிய அரசுகளை விட #மாகாண/ #மாநில அரசுகளின் சுகாதாரத்துறை மற்றும் சிறு துறைகளே பங்காற்ற முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிய அரசுக்கு உள்ளது

Covid -19 #வைரஸ் ஒரு புறம் இயற்கையை மட்டுமல்ல மறுக்கப்பட்ட உரிமைகள், ஒன்றிய அமைப்பில் நசுக்கப்பட்ட குரல்களை புத்துணர்ச்சி பெற வைத்து கொண்டு தான் இருக்கிறது

Tamil Research Institute