அமெரிக்க தேர்தல் – ஒரு பார்வை

193

5 வருசத்துக்கு ஒருக்கா இந்தியால ஒரு திருவிழா வரா மாறி 4 வருசத்துக்கு ஒருக்கா வர திருவிழா தான் US Presidential election.

இந்த US தேர்தல பத்தி, UKல இருக்க ராஜா ல இருந்து Antarctica ல இருக்க பாண்டா வரைக்கும் ஒரு கருத்து கணிப்பு சொல்லும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது தான் இந்த அமெரிக்க தேர்தல்.

4 வருசத்துக்கு ஒரு தடவ நவம்பர் ல election வச்சு, January ல President ஆட்சிக்கு வந்துருவாரு. இது தான் காலம் காலமா தொன்று தொட்டு அமெரிக்கால நடந்துட்டு வருது.

ஆனா இந்த தேர்தல் சற்றே வேறுபட்ட மாறுபட்ட ஒரு தேர்தல். அத பத்தி தான் இன்னைக்கு பாக்க போறோம்.

இந்த தேர்தல பத்தி புரிஞ்சிக்கனும்னா, நாம first uh அமெரிக்க political system பத்தி பாக்கனும்.

எப்படி இங்க காங்கிரஸ் பாஜக வோ, அதே போல தான் US ல Republic, Democratic னு 2 பெரிய கட்சி இருக்கு. இவங்க 2 பேருக்கும் நடக்கும் மோதல் தான் இந்த தேர்தல்.

இதுல Republic கட்சி சார்பாக நம்ம Trump um, Democratic கட்சி சார்பாக Obama அவையில் Vice President ஆக இருந்த Joe Biden um போட்டி போடுறாங்க.

நம்ம ஊரு மாறியே அங்கயும் ஒரு Lok Sabha & Rajya Sabha இருக்கு.

அத House of Representatives ( Lower house) & Senators ( Upper House) னு சொல்வாங்க.

நம்ம ஊருல ஒரு மசோதா பில் பாஸ் பன்னனும்னா லோக் சபையில ஒரு தேர்தல் வச்சு, ராஜ்ய சபையில ஒரு தேர்தல் வச்சு, கடைசியா President ஒரு கையெழுத்து போட்டு அத Act ah கொண்டு வருவாங்க.

அதே போல அங்க Representative, Senator களை கடந்து தான் ஒரு law pass பன்னுவாங்க.

இதுல 2 வருசத்துக்கு ஒரு தடவ இந்த representatives ah தேர்வு செய்வாங்க. 6 வருசத்துக்கு ஒரு தடவ Senators களை தேர்வு செய்வாங்க.

சரி நம்ம President மேட்டருக்கு வருவோம்.

நம்ம ஊர்ல நடக்குற மாதிரியே அங்கயும் எல்லா மக்களும் சேர்ந்து அதிபர் வேட்பாளருக்கு வோட்டு போடுவாங்க. ஆனா அதுல ஜெயிக்கிறவங்க அதிபராக முடியாது.

அப்போ எதுக்கு மக்கள் வோட்டு போடனும்னு உங்களுக்கு ஒரு Mindvoice கேள்வி எழுப்பும்.

அந்த கேள்வி எனக்கும் இருக்கு, அதுக்கான பதில தான் நா தொலவிட்டு இருக்கேன்.

இந்த மக்கள் வோட்ட Popular Vote னு சொல்வாங்க.

அடுத்து Electoral College னு ஒரு விடயத்த கொண்டு வராங்க. அது தான் US President ah தேர்ந்தெடுக்க போகும் விடயம்.

எப்படி நம்ம நாடு 29 மாநிலங்களா பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தேர்தல் நடத்தி மொத்தமா tally பன்னி நாட்டு பிரதமர தேர்ந்தெடுக்குறாங்களோ, அதேபோல US ah 50 மாகாணங்களா பிரிச்சிருப்பாங்க. இதுல ஒவ்வொரு மாகணத்துக்கும் தலா 3 Electoral College Seat கள் வழங்கப்படும். அதுக்கு அப்றம் Population அடிப்படையில ஒவ்வொரு மாகணத்துக்கும் அதிக seat தருவாங்க.

உதாரணத்துக்கு California மாகாணத்துக்கு 55 seats um, Florida மாகணத்துக்கு 29 seats um இந்த தேர்தல்ல வழங்கப்பட்டிருக்கு.

இதுல இருக்க 50 states லயும் உள்ள மொத்த seats அயும் கூட்டினா 538 வரும்.

இத தான் 538 electors னு சொல்வோம்.

இதுல 435 House of representatives um + 100 Senators um + 3 பேரு Washington DC ல யும் வோட்டு போடுறாங்க.

270 ~ இது தான் மேஜிக் நம்பர். இது தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் நம்பர். இந்த நம்பர்காக தான் இப்போ Trump um Biden um போட்டி போடுறாங்க.

270 electoral college votes ஐ வாங்கும் நபரே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். Popular vote என்று சொல்லப்படும் மக்கள் வாக்கு அதிகமாக வாங்கினாலும் அவர்கள் electoral college vote கம்மியா வாங்கிருந்தாலும் அவங்களால அதிபராக முடியாது.

இதே தான் 2016 இலும் நடந்தது. Trumpக்கு Hilary Clinton ஐ விட மக்கள் வாக்கு கம்மியா இருந்தாலும், Electoral college அடிப்படையில Trump அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே தான் George Bush வெற்றிக்கும் காரணம்.

அதனால தான் அந்த 270 எனும் மேஜிக் நம்பருக்கு இவ்ளோ மவுசு.

மக்களாட்சி என்னும் வார்த்தையே Abraham Lincoln ஆல் தான் வரையறுக்கப்பட்டது.

Democracy is a government of the people, by the people, for the people.

ஆனா இந்த மக்களாட்சி யின் அடிப்படையில் தான் US தேர்தல் நடக்கிறதானு பாத்தா பெரும்பாலும் இல்லைனு தான் சொல்லனும்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் Trump.

எல்லா election லயும் ஒரு flaw இருக்கும். ஆனா அமெரிக்காவை பொருத்தமட்டில் election eh ஒரு flaw தான்.

இந்த system ah மாத்தாம எத்தன election வச்சாலும் அதுல flaw இருந்துட்டே தான் இருக்கும். அது வரைக்கும் Trump க்களும் ஜெயித்து கொண்டே தான் இருப்பார்கள்.

நன்றி🙏